வாழ்ந்தோர். அப்பாடல்கள், தொகுக்கப்படுதற்கு ஓரிடத்தில் எவ்வாறு கிடைத்தன என்பது ஆராயப்படுதல் வேண்டும். சங்கத்தே அரங்கேற்றப்பட்ட பாடல்கள் அங்கு படியெடுக்கப்பட்டுக் கிடந்தமையாலே அவைகள் ஓரிடத்திற் கிடைத்தன வென்பது நன்குவிளங்கும். சங்க வரலாறு கி. பி. 7-ம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் பழைய வரலாறாக விருந்ததென்பது1 "கூடலிலாய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ" என்னும் மாணிக்கவாசகரின் திருவாக்கானும் "நன்பாட்டுப் புலவனாய் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் களித்தான்காண்" என்னும் திரு நாவுக்கரசர் தேவாரத் தானும் நன்கு விளங்கும். சங்கத்தின் இறுதிக் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் எனப் பெரும்பாலுங் கொள்ளப்படுகின்றது.2 இடைச்சங்கம் கபாடபுரத்தி லிருந்ததெனப்படுகின்றது. இது தாமிரபர்ணி ஆற்று முகத்துவாரத்திலுள்ளதென இராமாயணங் கூறுகின்றது. கபாடபுரத்தின் அழிவுக்குப் பின் பாண்டியரின் தலைநகரம் மணலூரிலிருந்தது. இது திருச்செந்தூருக்குப் பக்கத்தில் இருந்ததெனக் கருதப்படுகின்றது. மாபாரதம் பாண்டியரின் தலைநகரம் மணலூரிலிருந்ததாகவே கூறுகின்றது. அதன் பின்பே இப்பொழுதுள்ள மதுரை பாண்டியரின் தலைநகராயிற்று. இப்போதைய மதுரை முன் கடம்பவனமாயிருந்ததெனத் திருவிளையாடற் புராணங்கூறும், "கின்னரம்பயில் 1. ..........................................பாண்டியர் பாடு தமிழ் வளர்த்த கூடலின் வடா அது (ஆசிரியமாலை-புறத்திரட்டு) 2. We may for the present hold as a safe hypothesis that the Sangam epoch covered the three centuries of the Christian era-Chera kings of sangam Period-P. 121 - K.G. Sesha Aiyer. த.இ.-11-18 |