பக்கம் எண் :

274தமிழ் இந்தியா

கடம்பவானத்தின் கீழ்சாரத் தென்னன் சேகரன் என்னுங் குலசேகரனாம், மன்னர் சேகர னரசுசெய்திருப்பது மணவூர்" என்பது திருவிளையாடல், மெகஸ்தினசும், கௌடலியரும் மதுரையைக் குறிப்பிட்டுள்ளார்கள். கடைச்சங்க காலத்தில் இருந்த அரசர் 49-பேர் என்று கூறப்படுகின்றனர். தற்கால முறையின்படி ஒர் அரசனுக்கு 20 ஆண்டு ஈயின் அவர்களின் மொத்த ஆட்சிக் காலம் 980 ஆண்டுகளாகும். ஆகவே, கடைச்சங்கம் கி. மு. 7-ம் நூற்றாண்டில் தொடங்கிற்று எனக் கூறுதல் தவறாகாது. முறைக்கு முறை நேர்ந்த கடல்கோட் குழப்பங்களால் அரசரால் திரட்டி வைக்கப்பட்ட தமிழ்நூல்கள் அழிவெய்தினவென்று உய்த்துணர்தல்கூடும். தலமிசோத்தர் என்பவரால் அலக்சாந்திரியாவில் தொகுத்து வைக்கப்பட்ட 700,000 நூல்கள் அழிந்து போனமை இதனோடு ஒப்புநோக்கத்தக்கது. கடைச்சங்கம் குலைந்தபின் கி. பி. 470-ல் வச்சிரநந்தி என்பவரின் தலைமையில் திகம்பரசைனரால் தமிழ்ச்சங்கம் தொடங்கி நடத்தப்பட்டது.


அகத்தியர்

  அகத்தியர் தலைச்சங்கத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர் என இறையனார் களவியல்உரை கூறுகின்றது. அகத்தியர் என்னும் விண்மீன் ஒன்றைப் பரிபாடல் கூறுகின்றது. மணிமேகலையில் (கி. பி. 200) அகத்தியர் அமர முனிவர் எனச் சுட்டப்படுகின்றார். "கஞ்ச வேட்கையிற் சுகந்தன் வேண்ட, அமர முனிவ னகத்தியன் றனாது, கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை"

  "கடவுள் கணிகை காதலஞ் சிறுவன், அந்தண ரிருவரும்" என வரும் மணிமேகலை அடிகளுக்கு "திலோத்தமை பிள்ளைகளாகிய வதிஷ்டர் அகத்தியர்" எனப் பொருள்கூறி "வசிஷ்டனும் அகஸ்தியனும் பிரஹ்மா