பக்கம் எண் :

தமிழ் இந்தியா275

திலோத்தமை யென்னும் அப்ஸரஸைக் கண்ட காலத்து ஐனித்தனர்." (நீல-சமயம்) என்னும் மேற்கோளையும் எடுத்துக் காட்டியுள்ளார் டாக்டர் சாமிநாத ஐயரவர்கள். புராணங்கள் வதிஷ்டர், அகத்தியர், விசுவாமித்திரர் முதலியோரின் தந்தை மித்திரவருணன் என்றும் கூறுகின்றன.1 மத்திரவருணன் தமிழ்மரபினரே என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.

திருமந்திரம் கி. பி. 5-ம் நூற்றாண்டு அளவிற் செய்யப்பட்டது. அதனகத்தே அகத்தியரைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது.

"நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன வீசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே" (திருமந்திரம்),

புறப்பொருள் வெண்பா மாலைப் பாயிரத்தில்,

"மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவன்"

எனவரும் அடிகளும் ஷ கருத்தைத் தழுவிச் செய்யப்பட்டதாகும்.

  இவ்வரலாறுகளால் கிறித்துவ ஆண்டின் தொடக்கத்துக்கு முன்னர் அகத்தியர் வரலாறு கற்பனைக் கதைகள் பலவற்றுடன் கலந்த பழங்கதையாக மாறியுள்ளதென்று விளங்குகின்றது.
  வேதபாடல்கள் சிலவற்றைச் செய்தவரும் உலோபா முத்திரையை மனைவியாக பெற்றவருமாகிய அகத்தியர் ஒருவர் வேதகாலத்தில் விளங்கினார்.


  1. God Varuna himself was an Asura ( Dravidian)... Vedie kings and Rishis came to have Asura blood in them, as is indicated by the colour. Sages like Vasbistha, Agastya and Visvamitra were given the same father Mitra-Varuna - History of pre-Musalman India - P. 172.