இராமாயணத்தில் அகத்தியர் ஆசிரமம் கோதாவரியாற்றுக்கு வடக்கே உள்ளதெனக் கூறப்பட்டுள்ளது.1 தென்னாட்டில் அகத்தீச்சுரம் அகத்தியான்பள்ளி முதலிய ஆலயங்கள் இருக்கின்றன. அகத்தியர் தமிழுக்கு ஆதி2 இலக்கணஞ் செய்தாரென்றும், அவரிடத்தில் அதங்கோட்டாசிரியன், தொல்காப்பியர், பனம்பாரனார், செம்பூட்சேய், வையாபிகர், அவிநயர், காக்கை பாடினியர், துராலிங்கர், வாய்ப்பியர், கழாரம்பர், நற்றத்தர். வாமனர் என்னும் பன்னிருவர் கல்வி பயின்றார்களென்றும் வரலாறுகள் வழங்குகின்றன. இவைகளுக்கு, "வீங்குகடல் உடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்" என்னத் தொல்காப்பிய உரையிற் காணப்படும் பன்னிரு படலப் பாயிரம் என்னும் மேற்கோளையும், "தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த" 1. Agastya asrama : Twenty four miles to the south east of Nasik now called Agastepuri; It was the hermitage of Rishi Agastya-Geographical Dictionary of Ancient and mediaeval India-Nundo Ladley. 2. கானார்மலயந் தருந்தவன் சொன்ன கன்னித்தமிழ் - யாப்பருங்கலம். |