பக்கம் எண் :

தமிழ் இந்தியா277

என வரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிர அடிகளையுமன்றி வேறு மேற்கோள்கள் காண்பதரிது.

  "தமிழ் நாட்டில் அகத்தியர்கள்" என்னும் ஆராய்ச்சி நூல் எழுதிய கே.என். சிவராசபிள்ளை அவர்கள், அகத்தியரைப்பற்றிய கதைகள் கற்பனை எனக் கருதினார்கள். முற்காலங்களில் ஒவ்வோர் குடும்பத்தினரும் அவ்வக்குடும்பங்களின் ஆதி முதல்வர்கள் பெயர்களால் அறியப்பட்டார்கள். விசுவாமித்திரர், வதிட்டர், அகத்தியர் என்னும் பெயர்களும் அம்முறையில் வழங்கின. இவ்வாறு பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல அகத்தியர்களின் கதைகள் எல்லாம் ஒருங்கு திரண்டு பல கட்டுக்கதைகளோடு பின்னி இன்றைய அகத்தியர் வரலாறாக வழங்குகின்றதென்பது இற்றைஞான்றை ஆராய்ச்சியாளரது துணிபாகும். இஞ்ஞான்று அகத்தியர் பெயருடன் வழங்கும் வைத்திய நூல்கள் போன்றனவே முற்கால அகத்தியங்களுமாயிருத்தல் கூடும்.

  செங்கோன் தரைச்செலவி ஏழ்தெங்கநாட்டு முத்தூர் அகத்தியன் என்னும் தமிழ்ப் புலவர் ஒருவரின் பெயர் காணப்படுகின்றது.

  சுமத்திரா யாவா முதலிய நாடுகளில் அகத்திய விக்கிரகங்கள் மக்களால் வழிபடப்பட்டன. வாயுபுராணம், அகத்தியர் போணியோ, குசத்தீபம், வராகதீபம், மலையத்தீபங்களுக்குச் சென்றாரென்று கூறுகின்றது. அவர் சுமத்திராவிலே உள்ள மலாயு என்னும் மலையில் இருந்தார் என்னும் வரலாறு அங்கு வழங்குகின்றது. ஆதியில் சந்தன மரத்தினாற் செய்யப்பட்ட அகத்தியர் விக்கிரகம் மலாயரால் வழிபடப்பட்டது. கி. பி. 7-ம் நூற்றாண்டில் கல்லாற் செய்யப்பட்ட அகத்தியர் உருவம் வழிபடப்பட்டது. அகத்தியர் சிலை சடாமுடி கவசம் உருத்திராக்கம் முதலியவைகளுடன்