காணப்படுகின்றது.1 அகத்தியர் மரபிலுள்ளோர் பலர் அரசராயிருந்தார்களெனத் தெரிகின்றது. மத்திய யாவாவிலே சாண்டிபான் (Chandi Bann) என்னுமிடத்தில் உள்ள சிவன் கோயிலில் அழகிய அகத்திய விஷ்ணு விக்கிரகங்கள் காணப்படுகின்றன. ஸ்கிதிய (Scythians) மக்களிடையும் அகத்திரிசிகள் என்னும் ஒரு கூட்டத்தினர் இருந்தார்கள் எனக் கெரதோதச என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். பாதி பாம்பும் பாதி மனித வடிவுமுடையதாயும், செக்குலிஸ் என்னும் தந்தையும் அகத்திரிசிகளின் ஆதி முதல்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அகத்திரிசுகளிடையே காணப்பட்ட பல ஆடவர் ஒரு பெண்ணை மணக்கும் வழக்கம்போன்றது, மலையாளக் கரைகளிற் காணப்படுகின்றது.2 மலையாளம் முற்காலத்தில் நாகநாடு எனப்பட்டது. சேர என்பதற்கு நாகம் என்றே சாயணர் பொருள் கூறியுள்ளார்.3 ஒருகாலத்தில் மலையாளக் கரைகளினின்றும் வெளிப்போந்த அகத்தியர் மரபினரே அகத்திரிசிகள் என ஸ்கிதிய மக்களிடையும் காணப்பட்டார்களாகலாம். 1. சிதம்பர ஆலயத்தின் மேற்குக் கோபுரத்திலுள்ள அகத்தியர் வடிவம் "Cultural Heritage of India" என்னும் நூலில் காட்டப்பட்டுள்ளது. அவ்வடிவமும் இவ்வகையினதே. அகத்தியர் குடகு மலையிலிருந்து பொதியமலைக்கு வந்தமையின் அவர்குடகுமுனி எனப்பட்டாரென்றும், பின் குடகு குடமாகி குடகு முனிவர் குடமுனிவரானாரென்றும் பண்டிதர் சவரிராயனவர்கள் கூறுவர். குறுமுனி என்பது குறுக்கு மொழி தொடர் பெற்றிருக்கலாமென்பதும் அவர் கருத்து. 2. Sayana takes cera to mean snake-Sera kings of the Sangam Period - P. 132 K. G. Sesha Aiyer. 3. Agathirishis are a luxurious people and wear profusion of gold. They have promisecous intercourse with women to the end that they may be brotheren one of another, and being all of one family may not entertain hatred towards each other-Herodotus 9, 10. |