இந்திரனது தலைநகராகிய அமராபதி கிருஷ்ணாநதி முகத்துவாரத்திலுள்ளமையும், இந்திரன் தென்னாட்டிலே சிவலிங்கம் வைத்து பூசித்தமையுமாகிய வரலாறுகள் ஆராயப்படல் வேண்டும். தொல்காப்பியத்திற் காணப்படும் சில அகச்சான்றுகளாலும்,1 அதன் பாயிரத்தாலும் தொல்காப்பியர் காலத்தில் தமிழ் நாட்டின் வடக்கெல்லை வேங்கடமென விளங்குகின்றது. அகநானூற்றில் வரும் மாமூலனார் பாடல்களின், "பனிபடு சோலை, வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயத்தர் என்ப" "பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிற் குழீ இக் கங்கை முந்நீர் கரந்த நிதியங் கொல்லோ" "கனைகுர லிசைக்கும் விரைசெலற் கடுங்கண் முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு" எனவரும் அடிகளால் மாமூலனார் காலத்துக்குமுன் வேங்கடத்துக்கு வடக்கே பிறமொழி வழங்கிற்றென்றும் மாமூலனார் கி. மு. 300 வரையில் வாழ்ந்தவராவர் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றாண்டுக்குமுன் தமிழ் நாட்டின் வடக்கு எல்லை வேங்கடமாக விருந்திருந்தது எனத் துணிதல் கூடும். கலிங்க இளவரசனாகிய விசயன் காலம் முதல் (கி. மு. 6-ம் நூற்றாண்டு) தோன்றி வளர ஆரம்பித்த சிங்கள மொழியில் இலக்கியம் முதன் முதல் கி. பி. 10-ம் 1. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின், நாற்பெயரெல்லை அகத்தவர் வழங்கும், யாப்பின் வழிய தென்மனார் புலவர்- தொல், செ. 79. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும், தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி-தொல். எ. 4. (செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நாடுகளும் சங்ககாலச் சேர சோழ பாண்டியர் நாடுகளின் எல்லைக்குட்பட்டனவாதலின் தொல்காப்பியர் காலத்து வேங்கடம் தமிழ்நாட்டு வடக்கெல்லை எனத் துணிதும்). |