நூற்றாண்டில் எழுந்தது. ஆந்திர மொழியிலும் இலக்கியங்கள் கி. பி. 9-ம் நூற்றாண்டு முதல் எழ ஆரம்பித்தன. ஆகவே இரு மொழிகளின் காலமும் ஒன்று என (கி. மு. 6-ம் நூற்றாண்டு) உத்தேசமாகக் கூறலாம். அக்காலத்திலோ அதன் சிறிது பிந்தியோ தமிழ் நாட்டின் வடக்கெல்லை வேங்கடமாயிற்று. "பரந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராணமென்பன, சில் வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின் தொகுத்துக் செய்யப்பட்ட வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இன்றுகாறும் உளதாயிற்றென்க. கடைச் சங்கத்தாரும் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனார் இடைச்சங்கத்தார்க்கும் கடைச்கங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றாராகலானும் (பேராசிரியர் உரை. மர. 649). "தொல்காப் பியம்புலவர் தோன்ற விரித்துரைத்தார் பல்காய னார்வகுத்துப் பன்னினார்-நல்யாப்புக் கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தந் நூலிற் றொகுத்து என வருவனவற்றால் தொல்காப்பியர் முதல் பின்வந்த ஆசிரியர்கள் எல்லாம் முன் விரிந்து கிடந்த நூல்களைச் சுருக்கி நூல்கள் செய்தார்கள் என விளங்குகின்றது. தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் செய்த சிறப்புப்பாயிரமொன்று காணப்படுகின்றது. இப்பாயிரம் ஆராய்ச்சிக்குரியது. தொல்காப்பியத்தில் நூல்களுக்குப் பாயிரம் செய்தற்கு விதிகாணப்படவில்லை. சங்கநூல்களுக்கும் |