இறையனார் களவியலுக்கும் பாயிரம் இல்லாமை கருத்திற்கொள்ளத்தக்கது. சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய நூல்களுக்குப் பொருளடக்கமே பாயிரமாக எழுதப்பட்டுள்ளது. வான்மீகர் இராமாயணத்தில் காணப்படும் பாயிரமும் இவ்வகையினதே. இதனால் சிலப்பதிகார காலத்தும் பிற்காலத்தும் வடமொழி நூல்களின் முறையைப் பின்பற்றிப் பாயிரஞ் செய்யப்படலாயிற்று எனக் கருத இடமுண்டு. பாயிரம் நூலுக்கு இன்றியமையாததென இறையனார் களவியல் உரை முதல் வலியுறுத்துகின்றது. இறையனார் களவியலுரை நக்கீரனாராற் செய்யப்பட்டு நீண்டகாலம் செவிவழக்கில் வந்து கி. பி. 7-ம் நூற்றாண்டளவில் எழுதி வைக்கப் பட்டது. இதனால் கி. பி. 7-ம் நூற்றாண்டில் அல்லது அதற்குச் சிறிதுமுன் நூலுக்குப் பாயிரம் இன்றியமையாதது என்னும் கொள்கை வலுவடைந்திருத்தல் வேண்டும்.1 தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களுக்குள்ள பாயிரம்போலல்லாது, நூல், நுவல்வோன், நுவலுந்திறன் முதலியவற்றைக் கூறுவனவாயுமுள்ளது. இவைகளை எல்லாம் ஒருங்குவைத்து ஆராயுமிடத்துத் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம், கி. பி. 5-ம் அல்லது 6- நூற்றாண்டு வரையில் இருந்த பனம் பாரனார் என்னும் புலவர் ஒருவரால், அக்காலம் தொல்காப்பியத்தைப்பற்றி வழங்கிய 1. திருக்குறள் சங்கநூலாதலின் அதற்குப் பாயிரம் தோன்றியிருக்க முடியாது. நூலுக்குப் பாயிரம் இன்றியமையாததென்னும் கொள்கை வலுப்பட்ட ஒரு காலத்தில் பிற்காலத்தார் ஒருவர் முன் நான்கு அதிகாரங்களையும் பாயிரவியல் என எழுதி வைத்தாராகலாம். உண்மையில் அவ்வதிகாரங்கள் பாயிரமாயின் அவை திருவள்ளுவர் செய்தனவாகா. |