கன்னபரம்பரை வரலாறுகள் எல்லாவற்றையும் திரட்டிச் செய்யப்பட்டதெனத் தெரிகின்றது. பாயிரத்தில் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரெனக் கூறப்படாமை நோக்கத்தக்கது. இலக்கணக் குறிப்புகள் சில தொல்காப்பியர் வியங்கோள் வினை, தன்மை, முன்னிலை என்னும் ஈரிடத்தும் வராதெனக் கூறுவர். "அவற்றுள்-முன்னிலை தன்மை யாயீ ரிடத்தோடு, மன்னாதாகும் வியங்கோட் கிளவி" (தொல், சொல், விணை.) புறநானூற்றின் இரண்டாம் பாட்டைச் செய்த முரஞ்சியூர் முடிநாகராயர், வானவரம்பனை நீயோ பெரும, "நடுக்கின்றி நிலியரோ" எனமுன்னிலையிடத்து வியங்கோள் வினையைப் பயன்படுத்தி யிருக்கின்றார். இதனால் முரஞ்சியூர் முடிநாகராயர் தொல்காப்பியர் காலத்துக்குப் பிற்பட்டவரென உய்த்தறியலாம். தொல்காப்பியர் காலத்தில் வியங்கோள்வினை படர்க்கை இடத்துமட்டும் பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் அது முன்னிலை யிடத்தும் வழங்கிற்று. நன்னூலார் அதனை மூவிடத்தும் பயன்படுத்தினார். "கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள், இயலு மிடம்பா லெங்கு மென்ப" (நன்-338). இச்சூச்திரத்தினால் நன்னூலாருக்கு முன்னும் வியங்கோள் தன்மையிடத்தும் வழங்கிற்று எனத் தெரிகின்றது. எட்டுத் தொகை பத்.துப் பாட்டு முதலிய நூல்களில் உயர்திணைப் பெயர்கள் கள் விகுதி ஏற்கவில்லை. மணிமேகலை சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் உயர்திணைப் பெயர்கள் விகுதி ஏற்கும் வழக்குக் காணப்படுகின்றது. யாங்களும் நீணெறிப்படருதும் (சிலப்.) எனவும், "நோன்பிகள் விழுமங் கொள்ளவும்" (மணி.) எனவும், வருதல் காண்க. பிற்காலங்களில் கள் விகுதி உயர்திணை அஃறிணைப் பெயர்களுடனும் |