என்னும் சொல் அறிவிக்கின்றது. இவ்வாறு பண்டையோர் தாமறிந்த பொருள்களுக்கும், செய்லகளுக்கும் இட்டு வழங்கிய சொற்கள் அவர்களது வரலாற்றினைக் கூறுவனவாகின்றன. ஆரியர் வருகைக்குமுன் தமிழர் நாகரிகம் எவ்வாறிருந்ததென்பது இம்முறையில் அறிந்து கூறுதல் இயன்றது. நிலப்பிரிவும் மக்கட் பிரிவும் இவ்வுலகம் மலையும் காடும் வயலும் கடற்கரையும் பாலைநிலமுமெனப் பலவகை இயற்கைப் பிரிவுகளுடையது. இவ்வகைப் பிரிவுகள் தமிழர் வாழ்ந்த 1 இந்திய நாட்டிலும் உண்டு. ஒவ்வொரு நிலத்தில் வாழ்ந்த மக்களும் வெவ்வேறு வகை வாழ்க்கை நடத்தினர் மலை காடு வயல் கடல் என்பனவும், அவை சார்ந்த நிலங்களும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் பெயர்கள் பெற்றன. மணல் வெளி பாலை எனப்பட்டது. அந்நிலங்களில் வாழ்ந்தோர் முறையேகுறவர் இடையர் உழவர் பரதவர் மறவர் எனப்பெயர் பெற்றனர். நிலம்பற்றிய இப்பிரிவையன்றி அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் அடியோர் எனத் தொழிற் பாகுபாடுபற்றிய பிரிவினரும் வாழ்ந்தார்கள். வினைவலர் பல தொழில் புரிவோராயும், அடியோர் கால்வழியாகத் தொண்டு புரிவோராயு மிருந்தனர். அடிமைகளை விற்று வாங்கும் வழக்குப் பண்டை நாட்களில் எல்லா நாடுகளிலும் காணப்பட்டது. சுந்தர மூர்த்தி சுவாமிகள் வரலாறும் அரிச்சந்திரன் கதையும் இதற்குச் சான்றுகளாகும். வினைவலர் அடியோர் என்னும் இரு பிரிவினரும் 1. இந்தியாவென்பது அலக்சாந்தரின் படையெடுப்புக்குப்பின் மேற்கு நாட்டவர்கள் நாவலந்தீவு என வழங்கிய நமது நாட்டுக்குக் கொடுத்த பெயர். இந்தியாவென்பது சிந்து என்பதன் திரிபு. சிந்து என்பதைக் கிரேக்கர் ஹிந்து என வழங்கினர். |