பக்கம் எண் :

44தமிழ் இந்தியா

கீழோரெனவும் ஏனையோர் மேலோரெனவும் அறியப்பட்டனர்.

மறவர்

  இவர்கள் எயினர் வேடர் புளிஞர் எனவும் கூறப்படுவர். இவர்கள் அலைந்து திரியும் திருந்தாத வாழ்க்கையர்; மணல் வெளிகளின் இடையிடையே கிடக்கும் பற்றைகளில் தங்கி வேட்டையாடியும், வழிச்செல்வோரை வழி பறித்தும், முல்லை நிலத்தே சென்று பசுக்களைக் கொள்ளையடித்தும் வாழுநர். தமிழ் இலக்கியங்களில் இப் பாலை நில மக்களின் கொடிய செயல்கள் பலவாறு வருணிக்கப் பட்டுள்ளன. அவைகளிற் கூறப்பட்டவைகளின் சுருக்கம் வருமாறு: மறவர் செம்மறிக்கடாவின் கொம்புபோன்று முறுக்கிய மீசையும் புலியின் மீசை போன்ற தாடியுமுடையர்; நெருப்பில் நீர் விட்டாற்போன்ற நிறத்தினர்; செருப்புத் தொட்ட சாலினர்; இப்பியும் சோகியும் கலந்து கோத்து அணிந்த கழுத்தினர்; முறுகிய சடையினர்; வில்லும் அம்பும் கொண்ட கையினர்; வழிப்போக்கரை எதிர்பார்த்திருக்கும் இயல்பினர்; தறுகண்மையே உருக் கொண்டாலன்ன கொடுமையர்; இவர்கள் வழிச்செல்லும் வணிகர் கூட்டத்தவரின் தலைகளைக் கொய்து அவர்களின் விலையுயர்ந்த பண்டங்களைக் கொள்ளையிடுவர்; அப் பண்டங்களைச் சிறுவிலைக்கு விற்பர்; வழிப்போக்கரின் கட்டுச் சோற்றைப் பறித்துச் சிலை உறியிற் பத்திரப்படுத்துவர்; வணிகரிடம் கொள்ளை கொண்ட பெண்களணியும் மேகலாபரணங்களையும் அசோகந் தழையையும் உடுப்பர். கையிற்பட்ட வழிப்போக்கரை ஆடென நினைந்து காளிக்கு வெட்டிப் பலியிடுவர்.

  அரம்போன்ற கற்களுடைய பாலை நிலந்தே இறந்தவர்களை இட்டு மூடிய கற்கும்பங்கள் பல கிடக்கும். தட்பக் காலத்தும் வெம்மை தோன்றும்