அவ்விடத்து வறந்த சுனைகளும் ஆறுகளும் கூலல்களும் காணப்படும்.1 மறவரின் குடில் வீடுகள் எலியும் அணிலும் நுழையாதபடி ஈந்தின் ஒலைகளால் வேயப்பட்டிருக்கும். மறப் பெண்கள் பாரையைக்கொண்டு எறும்புப் புற்றுகளைக் கிண்டிப் பெற்ற புல்லரிசியை முற்றத்தே கிடக்கும் நில உரலிற் றீட்டி, கிணற்று நீரை மொண்டு பானையில் உலை வார்த்து ஆக்கிய சோற்றை உப்புக்கண்டத்தோடு தேக்கிலையில் உண்பர். மறவர் கூட்டமாக வாழும் இடங்கள் பறந்தலை எனப்படும். இக் குடியிருப்பு ஊகம்புல்லால் வேய்ந்த மதிலாற் சூழப்பட்டிருக்கும். தலைவாயிலில் அம்புக்கட்டும் பறையும் தூங்கும்; வாயிலிடத்தே சங்கிலியிற் கட்டிய நாய் நிற்கும். இந்நிலத்துக்குத் தெய்வம் காளி, கொற்றவை, விந்தை, காடுகிழாள் என்பவையும் காளியின் மறு பெயர்கள். காளி என்பது கறுப்பி என்னும் பொருள் தரும் பெயர். காளிக்கு நரபலியும் பிற உயிர்ப்பலியுமிடப்படும்.2 குறவர் மலையில் வாழும் குறவர் அலைவதும் அலையாதிருப்பதுமாகிய வாழ்க்கையினர். அவர்கள் வில்லும் அம்பும் கொண்டு வேட்டையாடினர்; வேட்டையாடிக் கொன்ற விலங்குகளின் தோலை உடுத்தினர். அவர் மகளிர் மரவுரி தழை உடைகளை அணிந்தனர். ஆகவே, மன்றற்காலங்களில் மணமகன் மணமகளுக்குத் தழைகாளலும் பூக்களாலும் கட்டிய உடைகளைக் கொடுக்கும் வழக்கு உண்டாயிற்று. இது மலையாளத்தில் முண்டு கொடுக்கும் 1. பெருங்கதை. 2. பெரும்பாண். |