வோளார் ஆற்றோரங்களில் வாழ்ந்து தானியங்களை விளைவித்தோர் வேளாளர் எனப்பட்டனர். அவர்கள் ஆற்று நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தனர். ஆற்றுக்குச் சேய்மையில் வாழ்ந்தோர் மழை நீரை, ஏரிகளிலும் குளங்களிலும் தேக்கிவைத்து ஏற்றம் கபிலை பிழா இடா முதலிய வைகளாலிறைத்துச் சாமை அவரை துவரை முதலிய தானியவகைகளையும் விளைவித்தனர். அதற்கு அப்பால் பருத்தி விளைந்தது. கற்காலத்திலேயே இந்திய மக்கள் பருத்த ஆடை உடுத்தார்கள். அக்காலத்தில் மற்யை நாடுகளில் மக்கள் தோல் கம்பளி சணல் ஆடைகளை உடுத்தினர்; அல்லது ஆடையின்றி யிருந்தனர். ஆற்றுச் சமவெளிகளில் ஆடை நெய்தற்கு வேண்டிய கற்காலப் பொருள்கள் கண்டு எடுக்கப்பட்டன. இதனால் அக்கால மக்கள் ஆடை நெய்வதில் தேர்ச்சிபெற்றிருந்தார்கள் என்று விளங்குகின்றது. அவர்கள் மரத்தினால் வீடுகட்டி வாழ்ந்தார்கள்; நெற்களஞ்சியங்கள் மரத்தினாற் செய்யப்பட்டன. வண்டியும் மரத்தினாற் செய்யப்பட்டது. வண்டி உரல் உலக்கை தொட்டில் முதலியன இக்காலத்திற் போலவே இருந்தன. இக்காலத் தச்சர் பயன்படுத்தும் ஆயுதங்கள் போன்று கல்லாற் செய்யப்பட்டவை புதிய கற்காலக் குடியிருப்புகளிற் கண்டெடுக்கப்பட்டன. இந் நிலத்துக்குரிய குலதெய்வம் வேந்தன். அக்கால மக்கள் நல்ல அரசனின் ஆளுகையில் எல்லா நன்மைகளும் உண்டாகின்றன என்று நம்பினார்கள். ஆகவே அவர்கள் எல்லா நற்குணங்களும் அமைந்த அரசனைத் தெய்வமாக வணங்கினார்கள்.1 பிற்காலத்தில் வேந்தன் இந்திரன் எனப்பட்டான். இது 1. உலகின் எல்லாப்பக்கங்களிலும் பழங்காலத்தே அரசர் கடவுளராக வழிபடப்பட்டனர். மேற்கு ஆசிய எகிப்திய வரலாறுகளின் த. இ.-II--4 |