பக்கம் எண் :

50தமிழ் இந்தியா

 

தமிழர் ஆரியர் கலப்பு நேர்ந்த பிற்கால வழக்கு. ஆரியர், இந்திரன் தேவர்களுக்கு அரசன் எனக் கருதினர். வேளாண் மக்கள் இந்திரனுக்கு விழாக்கள் சிறப்பாக எடுத்தனர். இவ்வகை விழாக்களைப்பற்றிச் சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய நூல்கள் அழகுறக் கூறுகின்றன. வேளாண் மக்கள் உழுதுண்போர் உழுவித் துண்போர் என இருவகையினர். இவருள் உழுவித்துண்போர் வேள் எனப்பட்டுக் குறுநில மன்னராகவும் ஆட்சி புரிந்தனர். இவ்வகுப்பினர் அரசனால் கணிக்கப்பட்ட பெருமக்களாவர். 

  மாடு ஒரு காலத்திற் செல்வமாக மதிக்கப்ட்டது. பின்பு தானியம்போன்ற உணவுவகைகள் செல்வமாக மதிக்கப்பட்டன. அதிக உணவுப் பொருள்களை வைத்திருப்பவனே செல்வனாக மதிக்கப்பட்டான். வேளாண் மக்கள் அதிக தானியங்களை விளைவித்துச் செல்வராய் வாழ்ந்தனர். அவர்கள் பெரிய வீடுவாயில்களையும் அமைத்தனர். அவர்களுக்கு வேண்டிய மட்பாண்டங்கள், உலோகப் பாத்திரங்கள் ஏர்த்தொழிலுக்கு வேண்டிய கலப்பை நுகம், கொழு முதலியன, அவர் மகளிர் அணியும் ஆபரணவகை, உடுக்கும் ஆடைகள் இவையும் இவை போன்றவைகளும் செய்துதவும் தொழலாளர் மருதநிலத்தே வந்து தங்கினர். பிற நிலங்களில் வாழ்வோர் தம் நாடுகளிற் கிடைக்கும் பண்டங்களைக் தானியங்களுக்குப் பண்டமாற்றுச் செய்ய வந்தனர். இவ்வாறு மருதநிலம், மக்கள் போக்குவரத்தும் ஆர வாரமமுடைய நகரமாக மாறிற்று: இங்குப்