பொழுது போக்குக்குரிய ஆடல், பாடல், விழா முதலியன நிகழ்ந்தன; இன்பக்கலைகள் வளர்ச்சியுற்றன. ஒவ்வொரு தொழிலாளரும் வாழும் வீதிகளுடைய நகரங்கள் இங்கேதான் தோன்றின. தமிழ் இலக்கியங்கள் மருதநில மக்களின் உண்டாட்டுக் கணியாட்டு நீராட்டு விளையாட்டுகளையெல்லாம் அழகாகக் கூறுகின்றன. பரதவர் கடற்கரை மக்கள் மீன் பிடித்தும் உப்பு விளைத்தும் வாழ்ந்தனர். அவர்கள் உப்புக் கண்டத்தையும் உப்பையும் தமக்கு வேண்டிய நெல்லுக்கும் பிறபொருள்களுக்கும் பண்டமாற்றுச் செய்தனர். அவர்கள் மரத்தைக் குடைந்து குடைவு தோணிகளையும் பெருங்கடலிற் செல்லத்தகுந்த நாவாய்களையுஞ் செய்தனர். முன்னர் அவர்கள் கரையை அடுத்துத் தோணிகளிற் சென்றனர்; பின்பு கருங்கடல் வழியாகத் தூரதேசங்களுக்குச் சென்று தென்னிந்திய ஆடைகளையும் மரங்களையும், பிறநாட்டுப் பொருள்களுக்கு மாற்றினர். 1 மகளிர் தழையுடை யுடுத்தனர். தந்தையர் கணவர் கொணர்ந்த மீன் இறால் என்பவைகளைக் காயவிட்டுப் புன்னை 1. The Bwera Jalaka which relates the adventures of Indian merchants taking to Babylon by sea the first peacock for sale indicates according to Prof; Bahler that, "the Banis of western India undertook trading voyages to the shores of persian gulf or of its rivers in the 5th perhaps in the 6th century B. C. "Studies in Indian History and culture,-P. 14 - Dr. Narendranath Law. இந்தியாவின் மேற்குக்கரை உரோமையோடு பெரிய வாணிகம் புரிகின்றது. சில இந்தியர் இந்துசீனம்வரையும் சென்று வியாபாரஞ் செய்கின்றனர். அவர்கள் பவளத்தையும் இளக்க முத்து மாலைகளையும் கொண்டு சென்று விற்கின்றனர். இவர்கள் கணக்குகளைப் புத்தகங்களில் எழுதிவைப்பதில்லை. இவர்கள் யானைத்தந்தம் அல்லது காண்டா மிருகக்கொம்பைத் தமது பொருள்களுக்கு விலையாகப் பெறுகின்றனர். இவர்களுள் மந்திர வித்தையிற் றேர்ந்தவர்கள் இருக்கின்றனர். ஒரு மனைவி கணவனுக்குக் காட்டக்கூடிய உயர்ந்த மரியாதை அவள் அவனுடைய பாதங்களை முத்தமிட்டு முழங்காலைத் தழுவிக்கொள்வதாகும். அவர்களின் வீடுகளில் பாடவும் ஆடவும் கூடிய இளமகளிர் இருக்கின்றனர். அரசனிடமும் மந்திர மாரிடமும் அநேக பட்டுக்கம்பளி உடைகள் உண்டு. அரசன் தனது தலைமயிரைச் சீனப்பெண்கள் போல உச்சியில் முடிகிறான். விவாக மானவர்களும் இப்படியே முடிகின்றனர். விவாகமாகாதவர்களும் இவ்வாறு முடிந்து காதைத் துளையிட்டு விலையுயர்ந்த வளையங்களை அணிகின்றனர். அவர்கள் பெரும்பாலும் வெண்ணிற ஆடைகளை உடுக்கின்றனர். அவர்களின் ஆயுதம் வில்லும் அம்பும். அவர்களுக்கு எழுத்தும் இலக்கியங்களும் உண்டு. வான சாத்திரத்தையும் சோதிடத்தையும் அவர்கள் நன்கு அறிவார்கள். எல்லோரும் பனை ஓலையில் எழுதிய சமயநூல்களைப் படிக்கின்றனர். இது மாதுவான் என்னும் சீனனால் எழுதப்பட்ட குறிப்பு-- Ma. Twan Lin (550--60 A.D.) |