பக்கம் எண் :

52தமிழ் இந்தியா

நிழல்களிலிருந்து புட்கள் ஒப்பிக் காவல் காத்தனர். நெய்தல் நிலமக்கள் பனைச் செறிவுகளில் சிறு குடில்களமைத்து வாழ்ந்தனர். அவை புல்லு அல்லது பனையோலையால் வேயப்பட்டன. அவர்கள் பூரணைக் காலங்களில் சுறாக்கோடு நட்டுப் பூமாலை அணிந்து கூத்தாடி வருணனை வழிபட்டனர்; தலையில் தழைகளை அணிந்தனர். வருணன் தமிழர் கடவுளென்றும் இக்கடவுள் ஆரிய மக்களால் வழிபடப் பட்டனனென்றும் முன் காட்டப்பட்டது.1
கடற்கரைத் துறைமுகங்களில் பெரிய பண்டசாலைகள் இருந்தன. இவைகளில் அரேபியா, யவன தேசம் முதலியவைகளிலிருந்து வந்த பண்டங்கள் சுங்கங்கொள்ளும் பொருட்டு அடுக்கிக் கிடந்தன. பிற நாடுகளுக்கு அனுப்பும் பொருட்டு வண்டிகளிலும் கழுதைகளிலும் பொதி மாடுகளிலும் கொண்டுவரப்பட்ட மூடைகள் அரசு முத்திரை குத்தப்பட்டுப் பண்டசாலையின் இன்னோரிடத்து அடுக்கப்பட்டுக் கிடந்தன.


1. சின்ன ஆசியாவிலே கித்தைதி என்னும் நாட்டிலும் வருணன் என்னும் கடவுள் வழிபடப்பட்டார்.