பக்கம் எண் :

54தமிழ் இந்தியா

களின்மீது பெரிய கொடிகள் அசையும். கழியிடத்தே விளைந்த உப்பை உமணப் பெண்கள் எடுத்து நெல்லுக்கு உப்பு என விலைகூறி விற்பர். பரதவர்சிறுமியர் உப்புக் குப்பங்களில் ஏறிநின்று கடலில்வரும் திமில்களை எண்ணுவர். பெண்கள் மாந்தழை நெய்தல்இலை முதலியவற்றை உடுப்பர். உப்பு வாணிகரோடு அவர்கள் வளர்க்கும் மந்தியும் கூடச்செல்லும். பரத்தியர் மீன்களை விலை பகர்ந்து செல்வர். சிறுமியர் கடற்கரையில் வண்டற் பாவை செய்தும், சிற்றில்புனைந்தும் சிறுசோறட்டும் விளையாடுவர். பரதவர் முற்றத்தே சுறாக் கிழித்த வலை தூங்கும். 

கோன்

  அரசியல் தமிழரிடையே மிகப் பழமைபெற்றது. கோன், ஏந்தல், வேந்தன், மன்னன், குரிசில், இறைவன், வள்ளல், அண்ணல், குறுநிலமன்னர் முதலிய பழந்தமிழச் சொற்களே இதற்குச் சான்று. அரசன் குடிகளை ஆள்வது ஆட்சியெனப்பட்டது. ஆள் என்பது மக்கள் ஒருமை. ஆட்சி என்பது இடையன் மந்தைகளைக் காப்பதுபோல மக்களைப் பகைவரினின்றும் காப்பது எனப் பொருள் பட்டது. ஏந்தல் என்பது போலவே வேந்தன் என்பதும் ஏந்து என்னும் அடியாகப் பிறந்ததாகலாம். அரசனுக்குப் பழைய பெயர் கோ அல்லது கோன். இதற்குப் பசுக்களை மேய்ப்பவன் என்பது பொருள். இது, ஆட்சி முதலில் முல்லை நிலத்தில் ஆரம்பித்து வளர்ச்சி யடைந்ததென்பதை விளக்கும். இந் நிலைமையிலேயே மக்கள மாடு பசு எனப்படும் செல்வத்தைத் தேட ஆரம்பித்தார்கள். ஆயர் தமது செல்வமாகிய மந்தைகளுடன் புற்றரைகளிற் றங்கி வாழ வேண்டியவர்களாயினர். மற்றச் செல்வங்கள் போலல்லாமல் ஆடுமாடுகள் கன்றுகளை ஈன்று பெருகும் இயல்பின. ஆயரின் புதல்வர் தங்குடும்பத்துக்குரிய மந்தைகளைப் பிரித்துக்