கொள்ளலாம். மேய்ச்சல் நிலங்களைப் பிரித்தல் முடியாது. மேய்ச்சல் நிலங்கள் ஓரளவுக்குமேற் சிறியவை யாக்கப்பட்டால் அவை ஆடுமாடுகள் மேய்வதற்குப் பயன்டா. ஆகவே குடும்பங்கள் ஒன்று சேர்ந்துவாழும் முறை உண்டாயிற்று. குடும்பத்தின் தலைவன் அதிகாரமுடையவனானான். பின் பல குடும்பங்களுக்கு அதிகாரமுடைய ஒருவன் தலைவனானான். அவன் சிறப்பாகக் கோன் எனப்பட்டான். இவ்வாறு அரசன் உண்டாயினான். அரசன் வாழும்மனை கோட்டை எனப்பட்டது. அரசனது அதிகாரம் உயர உயரப் போரும் வளர்ச்சியடைந்தது. கோட்டையைச் சூழ்ந்து மதில் அரண் செய்தது. ஆகவே, கோட்டை, அரண்மனை எனப்பட்டது. மதில் மண்ணோடு கேப்பைக்கழி கலந்து கட்டப்பட்டது. இது செங்கல் மதிலினும் வலிவுடையது. கோட்டையைச் சூழ்ந்து அகழ், அகப்பா, அல்லது அகழி இருந்தது. இச் சொற்கள் அகழ் என்னும் அடியாகப் பிறந்தன. உடு, ஓடை, கயம், பரிகம், பரிகை, பாம்புரி என்பனவும் அகழின் மறுபெயர்கள். பாம்பின் உரி பாம்பை நெருங்கி மூடியிருப்பதுபோல் இருத்தலின் அகழ் பாம்புரியெனப் பெயர்பெற்றிருத்தல் கூடும். கோட்டையின் வாயில் கொட்டி எனப்பட்டது. மதிலின் பின்புறத்தே நிலத்திலிருந்து மேலேயெழுந்து மேடைபோலிருப்பது கொத்தளம் எனப்பட்டது. மதிலின் மீது வீரர் மறைந்திருந்து அம்பு எய்தற்கு அமைக்கப்பட்டுள்ள மறைவிடம் ஞாயில் ஏவறை எனப்பட்டது. அரண்மனையிற் பல அறைகள் இருந்தன. தானியக்களஞ்சியம் கொத்தறை எனவும், அரசன் வீற்றிருக்கும் மண்டபம் கொலுவிருக்கை எனவும், ஆயுதங்கள் வைக்கும் அறை ஆயுதக்கொட்டில் எனவும் |