பக்கம் எண் :

தமிழ் இந்தியா65

நாடு நகரங்களும் மக்கள் குடியிருப்புகளும்


  அரசன் வாழும் கோட்டையைச் சுற்றிப் பேட்டைகள் இருந்தன. ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு தொழில் புரிவோர் வாழ்ந்தனர். இவ்வாறு பல குடியிருப்புகள் நகரைச் சூழ்ந்திருந்தன. பேட்டைகளைச் சுற்றி நெல் வயல்கள் இருந்தன. செல்வப்பெருமக்கள் வீடுகள் மாடங்கள் அல்லது மாளிகைகள் எனப்பட்டன. இவை மாடிகளுடையனவாய்ச் செங்கல்லினாலும் மரத்தினாலும் கட்டப்பட்டன. இறப்பு, இறை, தாழ்வாரம், முன்றில், முற்றம், நிலாமுற்றம், உத்திரம், தூலம், சுற்றுவாரி, தாழ், துடை, முகடு, விடங்கம், திண்ணை, குறடு, ஒட்டுத்திண்ணை முதலியன வீட்டின் உறுப்புகளிற் சில. வீட்டின் முன்னே திண்ணையிருந்தது. திண்ணைக்கு முன்னாற் குறடிருந்தது. திண்ணைகள் மண் கரி சாணி என்பவைகள் கலந்து மெழுகி அழுததஞ் செய்யும் கருவியால் மினுக்கப்பட்டன. வீடுகளுக்குக் கதவுகளும் நிலைகளும் சாளரங்களும் இருந்தன. வீடுகளின் கழிவுநீர் வெளியே செல்லச் சாக்கடை அல்லது சாலகங்களிருந்தன. வீட்டுச் சுவர்களில் முக்கோண வடிவான மாடாக்கள் இருந்தன. இவைகளில் மண்ணினால் அல்லது உலோகத்தினாற் செய்த கைவிளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. வீட்டிற்குப் பின்னால் கிணறு இருந்தது. கிணற்றுக்கு அப்பால் கொல்லையும், கொல்லையில் ஆடுமாடு நிற்கும் கொட்டிலும், அப்பால் வயலுமிருந்தன.

  உரல், உலக்கை, அம்மி, திரிகை, குழவி, ஆட்டுக்கல், முறம், சல்லடை, சட்டி, பானை, அகப்பை, மனை, கட்டுப் பெட்டி, கட்டில், தொட்டில், ஊஞ்சல் (வீசுபலகை) உறி, (சுமைதூக்கு) காவடி, சும்மாடு, கணப்பு (தீச்சட்டி). பரண்,
த. இ.-II--5