சுருங்கக் கூறுமிடத்து மக்கள் பயன்படுத்திய எந்தப் பொருளும் அழகிய வேலைப்பாடின்றிச் செய்யப் படவில்லை. தமிழ் நாட்டுச் சிற்பிகள் அழகிய சிற்பங்கள் அமைக்குந்திறமைகளையெல்லாம் கோவில்களிற் காட்டியுள்ளார்கள். மகளிர் கூந்தலைப் பலவாறு கோதியும் பின்னியும் முடிந்து பலவகைத் தலை அணிகளை அணிந்து பூக்களால் வேய்ந்தனர். மேனியைச் சந்தனக்குழம்பு குங்குமம் முதலியவைகளால் அலங்கரித்தனர்;1 மான்மதம் முதலிய வாசனைப் பொருள்களைப் பூசினர்; காதிற்றுளையிட்டுப் பொன்னோலை யணிந்தனர். மணம்முடித்த பெண்கள் தாலி அணிந்தனர். முத்துமாலை, பவளமாலை, பொற்சங்கிலி, பாதசரம், சரப்பளி, நெற்றிச்சுட்டி, சங்குவளை, பொன்வளை, மோதிரம் முதலிய பல அணிகலன்கள் அணிந்துகொள்ளப்பட்டன. யானை குதிரை எருது முதலியவற்றிற்கும் அணிகள் அணியப்பட்டன. பொழுதுபோக்கு விழாக்காலங்களில ஆடல்பாடல் உண்டாட்டுக் கனியாட்டு முதலிய கொண்டாட்டங்கள் நடந்தன. வேட்டையாட்டம், மற்போர், வாட்போர், சிலம்பம், தேர் யானை, மாட்டுப் பந்தயங்கள், அம்மானை, பந்து, 2ஊஞ்சல் விளையாட்டுகள், காடைப்போர், கௌதாரிப்போர், ஆட்டுப்போர் முதலியன அக்கால மக்கள் பொழுது போக்குகள். இசைபாடுதலும் பொழுதுபோக்குகளில் ஒன்று. பழைய குறிஞ்சிப்பண் இன்று குறிஞ்சி இராகமாகவும், மருதம் கேதார இராகமாகவும், நெய்தல் புன்னாகவராளியாகவும் வழுங்குகின்றன. 1. கொடி பல வெழுதிய கோலத் தோளினர் - பெருங்கதை. 2. பிண்டிக்-கட்புடைக் கவீசினை நற்புடை நான்ற-தாழைக் கறிற்றூசல் விருப்புற் றூக்கியும்-ஷ |