பக்கம் எண் :

தமிழ் இந்தியா73

இதை உழுபடை, கலனை, நாஞ்சில், தொடுப்பு, படை, படைவாள் என்பன கலப்பையின் பெயர்கள்.

  வயல்களுக்கு நீர் ஆற்றிலிருந்து பாய்ச்சப்பட்டது ஆறுகளுக்கு அணைக்கட்டுகள் இருந்தன. ஆற்றுநீர் கால்வாய் அல்லது கால்வழியே சென்றது. கிணறு குளங்களிலிருந்து நீர் ஏத்தம், கபிலை அல்லது இறை கூடையினால் இறைக்கப்பட்டது.

கைத்தொழில்

  உலோகங்களில் வேலை செய்வோர், கம்மாளர், அக்க சாலையர், அறிவர், ஓவர், கண்ணாளர், கண்வினைஞர், கம்மியர், கொல்லர், கருமார், தட்டார், துவட்டர், புலவர், புனையர், வித்தகர், வித்தியர் எனப்பட்டனர். இவர்கள் இரும்பு, உருக்கு, செம்பு, வெண்கலம், வெள்ளி, பொன் முதலியவற்றில் வேலை செயதனர். பழைய சமாதிக் குழிகளில் காணப்பட்ட நகைகள் ஏனங்கள் முதலியன அக்காலத்தில் உலோகங்களில் வேலை செய்வோரின் திறமையைக் காட்டுகின்றன. பெரிய உலோகத் துண்டுகளை அடித்துத் தகடாக்கிப் பெரிய ஏனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. உலோகத் தகடுகள் அடர் எனப்பட்டன. தையலர், அணிகலன்களை மிக விரும்பினர். ஆகவே அணிதல் அழகு செய்தலை உணர்த்த ஆர், சூடு, புனை, பூண், மலை, மிலை, மிளை, வேய், எய், வெய் எனப்பல சொற்கள் காணப்படுகின்றன. சடைநர் என்போர் சங்கை அறுத்து அழகிய வளைகளைச் செய்தனர். குயினர் இரத்தினக் கற்களிற் றுளையிட்டனர்.

  ஆடை நெய்வோர் கம்மியர், சேணியர், காருகர் எனப்பட்டனர். நெசவுத்தொழில் மிக வளர்ச்சியுற்றிருந்தது.