இயல் 3 புத்தருக்கு முற்பட்ட இந்தியா மெகிதா1 என்பவர் சாதகக் கதைகளில் காணப்படுகின்றபடி அக்கால மக்களின் வாழ்க்கை முறைகளையும் பழக்க வழக்கங்களையும் நிரைப்படுத்தி எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் பழைய தமிழ் இலங்கை மக்களிடையே காணப்பட்டன போலவே உள்ளன. பண்டைத் தமிழ் இலக்கியங்களால் அறியக்கூடாத பல செய்திகள் அதனகத்தே காணப்படுதலின், அதன் சில பகுதிகளைச் சுருக்கி ஈண்டுத் தமிழிற் றருகின்றேம். அரசன் அரசன் எல்லா அதிகாரமும் உடையவனாயிருந்தான். அவனைக் கட்டுப்படுத்தும் பிரமாணங்கள் எதுவும் இருக்கவில்லை. அரசரின் குழந்தைகளைக் கைத் தாயர் பாலூட்டி வளர்த்தனர்; வளர்ந்தபின் அவர்கள் தனி ஆசிரியர்களிடம் கல்விகற்க விடப்பட்டனர். (பாண்டவர் துரியோதனாதி யோர் துரோணரிடம் கல்விபயின்றமை மாபாரதத்திற் கூறப்படுகின்றது.) கல்வி பயின்றபின் அவர்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு உவ அரசர்களானர்கள். அரசனுக்குப் பல தேவியர் இருந்தனர். அவருள் பட்டத்தரசியின் மூத்த புதல்வனே பட்டமெய்தினான். அரசாட்சி, தந்தையிலிருந்து மகனுக்கு வழிவழியே சென்றது. அரசனுக்குப் பிள்ளைகள் இல்லாதவிடத்து அவன் உடன் பிறந்தோனும், உடன்பிறந்தான் இல்லாதவிடத்து மருமகனும் ஆட்சி ஏற்றனர். இளவரசுப் பட்டம் கட்டும் போது புரோகிதர் வலம்புரிச் சங்கிலும் பொற்குடத்திலுமிருந்து இளவரசன்மீது நீர் தெளித்தனர். அக்காலத்தில் அவன் மனைவியும் உடனிருத்திப்பட்டத்துத் தேவியாக்கப்பட்டாள். பின்பு 1. Pre-Buddhist India - Ratilal - N. Mehita, M.A. |