பக்கம் எண் :

தமிழ் இந்தியா77

அரசனது நாவிதன் பொன் கத்தியினால் அரசனின் மயிரைக் களைந்து, அவனை முழுக்காட்டி நறுமணம் பூசினான். நாவிதன், அரண்மனையில் கவனத்துக்குரியவனாகவிருந்தான். அரசன், அணி செய்யப்பட்ட தலைப்பாகை அணிந்து பட்டாடை உடுத்துப் பொன்செருப்புத் தரித்தான்.

  அவன் செல்லும் தேரில் வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்டன.1 விழாக் காலங்களில் அவன் யானைமீது சென்றான். யானை பொன்னாலும் ஆடையாலும் அணி செய்யப்பட்டது.

  அரசனுக்குப் பெரிய மாளிகைகள், பல மனைவியர், விலை உயர்ந்த உடைகள், மணப்பண்டங்கள், பொன், வெள்ளி, முத்து, இரத்தினம், செம்பு, இரும்பு, தந்தம், சந்தனமரம், மான்தோல் முதலிய பல செல்வங்கள் உண்டு. அவன் வேட்டை நாய்களோடு வேட்டையாடச் சென்றான்; மது வருந்தினான்: பெண்களும் (பெரும்பாலும் நடன மாதர்) மதுவருந்தினர். அரசனது

  1. அரசன் அரையில் வெள்ளையாடை யுடுத்துத் தலையில் தலைப்பாகையைத் திருக்கின்றான். இவன் யானையிற் செல்லும்போது முத்தும் இரத்தினமும் பதித்த பொன் தொப்பியைத் தரிக்கின்றான்; கையில் பொன் நாடாக் கட்டுகிறான்; காவிற் பொற்சங்கிலி அணிகிறான். சிவந்த கம்பில் மயிலிறகு கட்டிய ஆலவட்டங்களைப் பலர் கொண்டு செல்கின்றனர். தெரிந்தெடுக்கப்பட்ட 500 பிறநாட்டுப் பெண்கள் அரசனைச் சுற்றிநின்று காவல் காக்கின்றனர். இவர்கள் நடனமாடிக் கொண்டு முன்னே செல்கின்றனர். இவர்கள் காலில் செருப்புத் தரித்திருக்கவில்லை. அரையில் ஆடை உடுத்திருக்கின்றனர்; முத்து மாலை பொன்வளைகளை அணிந்திருக்கின்றனர். அவர்களின் உடம்பு கற்பூரம் கஸ்தூரி முதலியவைகள் பூசி நறுமணமூட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் வெயில் படாதபடி மயிலிறகுக் குடை பிடிக்கின்றனர். நாட்டிய மாதருக்கு முன்னால் அரசனது கருமகாரர் பல்லக்குகளிற் செல்கின்றனர். பல்லக்குக் கொம்பு பொன்னாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீதிகள் புழுதியாயிருப்பதால் அரசன் 100 போர் வீரர்களை ஏவி வீதிகளுக்குத் தண்ணீர் தெளிக்கச் செய்கின்றான். Ad Chan Jukua (1225 A-D)--A chinese traveller.