பக்கம் எண் :

தமிழ் இந்தியா79

குதிரைகளுக்கு இரும்புக் கவசங்கள் இடப்பட்டன. குதிரை வீரர் வில்லும் வாளும் வைத்திருந்தார்கள்.1 காலாட்கள் வில், வாள், வேல், கேடகம் முதலியன கொண்டு சென்றனர்; அவர்கள் கவசம் அணிந்திருந்தனர்.

  படையின் பின்னே தச்சர் ஆயுதங்களுடன் சென்றார்கள்.2 சங்கு மேளம் முதலியவைகளை ஒலிக்கும் வாத்தியக்காரரும் சென்றனர்.

  படை பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. எல்லாப் படைக்கும் தலைவனாக ஒரு சேனாபதியிருந்தான். அவன் பெரும்பாலும் அரச குடும்பத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டான். அமைதியான காலங்களில் அவன் நீதிபதியாகக் கடமை பார்த்தான்.

  பெரும்பாலும், போர், தலைநகரைச் சுற்றி நடந்தது. படைகள் கூடாரங்களிற்றங்கின. அவை நிரைநிரையாகவும் ஒழுங்காகவும் சென்றன. போர் தொடங்குவதன்முன் அரசன் அல்லது அரசனோடு சென்ற புலவன் படைக்கு ஊக்கம் எழக்கூடிய சொற்பொழிவு செய்தான். சென்ற படை, நகரை முற்றுகையிட்டு மாற்றரசனைப் பணியும்படி அல்லது போர் தொடுக்கும்படி

  1. In their left hand they carry bucklers made of undressed oxhide, which are not so broad as those who carry them, but are about as long. Some are equipped in the javelins instead of bows, but all wear a sword, which is broad in the blade, but is not larger than three cubits; and this where they engage in close fight (which they do with reluctance) they weild with both hands to fetch down a lustier blow. The borsemen are equipped with two lances like the lances called Saunia and with a shorter buckler than that carried by foot soldiers - Arrian.

  2. Physicians with surgical Instruments, Medicines remedical oils and cloth in their hands; and women wish prepared food and beverage should stand behind uttering encouraging words to fighting men says Kaudalia - International law and customs in ancient India - Paramathanath Bandyopathyyaya-M.A., B.L.