தூண்டும். பணிதற்கு ஒருப்படாத மாற்றரசன் போர்தொடுப்பான். இக்காரணம் பற்றிக் கோட்டை மிகவும் வலுப்படுத்தப்பட்டிருந்தது. கோட்டையின் இடையிடையே கோபுரங்களும் கதவுகளும் இருந்தன. மதிலைச் சுற்றி அகழ் இருந்தது. அது பகைவரை அணுகாதபடி தடுத்தது. மதில்மீது பகைவர் காணாது நின்று பார்க்கக்கூடிய கோபுரங்களிருந்தன. முற்றுகையிடுவோர் அகழியைத் தூர்த்து அல்லது அதனை நீந்திக் கடக்க முயன்றனர். அகழி ஆழமுடையதாயும் பாம்பு முதலைகள் உறைவதாயும் இருந்தது. அதனைக் கடப்பது எளிதன்று. கோட்டை மதில்மீது நிற்பவர்கள் உருக்கிய உலோகங்களையும், கொதிக்கும் எண்ணெயையும், சூடான கல்லுச் சேறு என்பவைகளையும் பகைவர்மீது வீசி எறிந்தார்கள். அகழை நீந்திக் கடக்க முயன்றபோது மதிலின்மீதுள்ளோர் அம்பு, ஈட்டி, வேல் முதலியவைகளைப் பகைவர்மீது சொரிந்தனர். கோட்டையுள் இருப்போர், தம் முயற்சி பயனளியாவிடில் பணிந்தார்கள். முற்றுகைக் காலங்களில் உணவுக்குறைவு நேராதபடி வேண்டிய உணவுவகைகள் உள்ளே சேமித்துவைக்கப்பட்டன. இருகட்சி1 ஒற்றர்களும் எதிரியின் மறைவுகளை அறிய முயன்றார்கள். செய்திகள் ஓலைநறுக்குகளில் எழுதி அம்பிற்கட்டி எய்து அறிவிக்கப்பட்டன. 1. துறவியர், வணிகர், ஊமர், செவிடர், குருடர், இடங்கள் தோறும் திரிந்து கல்வி பயிலும் மாணாக்கர் முதலிய பல வேடம் பூண்டு சென்று பகைவரின் மறைவுகளை அறியும் ஒற்றர் பலர். பெண் ஒற்றர்கள் பரத்தையராகச் சென்று பகைவர் நாட்டிற்றங்கி அரசகுமாரரையும் பிற பெருமக்களையும் வசப்படுத்தி அவர்களை இறுதியிற் கொல்வர்; வணிகராகச் சென்றோர் பகைவரின் படை வீரருக்கு நஞ்சுகலந்த மதுவகைகளை விற்பர்; வேலையாட்களாகச் சென்றோர் பகைவரின் ஆடுமாடுகளுக்கு நஞ்சு கலந்த தண்ணீரும் புல்லும் கொடுப்பர். இவ்வாறு ஒற்றாடும் முறைகளைக் கௌடலியர் குறிப்பிட்டுள்ளார்-ஷ. |