செய்தி கொண்டுவருபவனை அல்லது தூதனைக் கொல்லுதல் கூடாதென்பது நீண்டநாள் வழக்கு. போரிற் காயப்பட்டவர்கள் பலகைகள்மீது வைத்து எடுத்துச் செல்லப்பட்டுச் சிகிச்சை செய்யப்பட்டனர். வெற்றிபெற்ற அரசன் தனது நகரத்துக்கு ஆடம்பரத்தோடு சென்றான். வீரர் விருந்து கொண்டாடினர். இராக் காலங்களில் நகர்க் கதவுகள் அடைக்கப்பட்டன. நகர் காவலர் நகரைப் பறைகொட்டிக் காவல் செய்தனர். அவர்கள் சிவந்த பூமாலைகளை அணிந்திருந்தனர். பலவகைத் தொழில் புரிவோர் மக்கள் பெரும்பாலும் வேட்டையாடினார்கள். ஊன் பெரிதும் விரும்பப்பட்டது. சுவையுள்ள இறைச்சியைப் பெறும்பொருட்டும் அரசன் வேட்டையாடச் சென்றான். வேட்டை யாடுவதையே வாழ்க்கையாகக் கொண்ட கூட்டத்தினரும் பலர் இருந்தனர். அவர்கள் வில், அம்பு, வலைகளுடன் விலங்குகளைத் தேடி மலைகளில் அலைந்தார்கள்; தோலாற் பின்னிய வலைகளை ஏற்றி மான்களைப் பிடித்தார்கள்; தோலுக்காகப் புலியும், தந்தத்துக்காக யானையும் வேட்டையாடப்பட்டன. வளர்ப்பதற்காகவும், இறைச்சிக்காகவும் குருவிகள் பிடித்து விற்கப்பட்டன. சில கிராமங்களில் எல்லோரும் குருவிகள் பிடிப்போராகவே யிருந்தார்கள். அவை வலையேற்றியும் பொறிவைத்தும் பிடிக்கப்பட்டன. வலை குதிரை வால் மயிராற் பின்னித் தடியிற் கட்டி நிலத்தில் வைக்கப்பட்டது. சிலர் பழக்கப்பட்ட பட்சிகளின் உதவியால் அவைகளைப் பிடித்தார்கள். பழக்கப்பட்ட குருவிகளின் குரலைக்கேட்டு அவ்வினப்பட்சிகள் வந்து கூடின. அப்பொழுது அவைகள் வலையில் அகப்படுத்தப்பட்டன. த. இ.-II-6 |
|
|