வீடுகளைக் கட்டினார்கள். வீடுகளுக்குக் கைமரங்கள் தூண்கள் கதவுகள் சாளரங்கள் முதலியவைகளை மரத்தினாற் செய்துதவும் தச்சர்களிருந்தார்கள். இவர்களால் அழகிய நாற்காலி, முக்காலி, கட்டில், ஏணி, பேழை முதலிய வீட்டுப் பொருள்கள் செய்யப்பட்டன. கயிறு, செருப்பு, பை, கேடகம் முதலியவற்றைத் தோலினாற் செய்யும் தொழிலாளர் பலர் இருந்தனர். மூலிகைகளைப் பையிலிட்டுக்கொண்டு திரியும் மருத்துவர், மூக்கில்லாதோர்க்குப் பொய்மூக்கு வைப்போர், மனைக்கு இடங்குறிப்போர், உறுப்புகளை நோக்கி மக்களின் நன்மை தீமைகளைக் கூறுவோர், வாய்ப்புக் கூறுவோர், கோள்நிலையறிந்து பயன்கூறுவோர், பேயோட்டுவோர், காணாது ஓடியவர்களின் அடியைத் தொடர்ந்து அவர்களைக் கண்டுபிடிப்போர், பாட்டுக்கள் பாடி மிகுந்த பொருளீட்டும் புலவர், குரங்கைப் பழக்கி அதனுதவியால் பாம்பைப் பிடிப்போர், கீரியைப் பழக்குவோர், வாத்தியகாரர், முரசறைவோர், கூத்தர், நடிகர், மாயவித்தை காட்டுவோர், கம்பங்கூத்தர், பாவையாட்டுவோர் முதலிய பல தொழிலாளரும் வாழ்ந்தனர். தகப்பன் செய்த தொழிலையே மகனும் செய்தான். இதனால் ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் செய்யும் தொழிலால் அறியப்பட்டனர். வேடர், மீன் பிடிப்போர், தச்சர், குயவர், நாவிதர், தெருக்கூட்டுவோர் கீழ்மக்கள் எனப்பட்டனர். கூலி வேலை செய்வோரும் அடிமைகளும் இருந்தனர். வறியவர்களின் வீடுகள் நகர்ப்புறத்தே இருந்தன. அடிமைகள் வீட்டிலேயே இருந்து வீட்டு வேலைகளைச் செய்தனர். உணவுசமைத்தல், தண்ணீரெடுத்தல், மாவரைத்தல், வயலைக் காவல்காத்தல், வயலுக்கு |