உணவு எடுத்துப்போதல், பிச்சை கொடுத்தல், வீட்டுத் தலைவனுக்குப் புத்திகூறுதல், உண்ணும் தட்டுகளைக் கழுவுதல், வீட்டிலுள்ளோர் உணவருந்தும்போது விசிறியால் விசிறுதல் போன்றன அவர்கள் புரியும் வேலைகளாகும். சேமிப்பு மாசா என்னும் பொன் நாணயங்களும் செம்பு நாணயங்களும் வழங்கின. செல்வர் தமது பணத்தைப் பொன்னாக மாற்றி உறுதியான பெட்டிகளிலும் பாதுகாப்பான அறைகளிலும் பூட்டிவைத்தனர். அணிகளும் பணமும் பெரும்பாலும் தலையணைகளுக்குள் வைத்துக் காக்கப்பட்டன. உணவு பொதுமக்கள் உயர்ந்த உணவைக் கொள்ளவில்லை. கஞ்சி, பணியாரம், கீரைவகை, காய்கறிகள், பால் முதலியன பொதுமக்களின் உணவுகள். செல்வர் வெல்லம், தேன், நெய், பால் முதலியன பெய்து சமைத்த கஞ்சியை உண்டனர். காலையில் ஒன்றும் மாலையின் ஒன்றுமாக இரு உணவுகள் கொள்ளப்பட்டன. உடை பஞ்சு ஆடைகள் பெரும்பாலும் உடுக்கப்பட்டன. ஆடவர் அரையில் ஒன்றும் தோளில்ஒன்றும் தலையிலொன்றுமாக மூன்று துணிகளைப் பயன்படுத்தினர். அவர்கள் அரையில் பைகளைக்கட்டி அவைகளில் விலையுயர்ந்த பொருள்களை வைத்திருந்தனர். வீடுகள் பொதுமக்கள், வீடுகளைச் செங்கல்லாற் கட்டினார்கள். வீட்டின் முன்னும் பின்னும் கதவுகள் இருந்தன. சாளரங்கள் |