வான ஆராய்ச்சி வான நூல் சோதிடம் என்பன வளர்ச்சியடைந்திருந்தன. கோள்களின் செலவுகள் முன்னமே அறிந்து கூறப்பட்டன. திங்களில் முயல் இருப்பது திங்களை இராகு விழுங்குவது முதலிய நம்பிக்கை இருந்தது.1 இசை இசைக்கருவிகளுள் வீணை மிகவும் முக்கியமுடையது. ஆடவரும் மகளிரும் விரும்பி அதிற் பயின்றனர். அது தனியே அல்லது பாட்டுகளுடன் வாசிக்கப்பட்டது. இது கைவிரலின் நுனிகளால் நரம்புகளைத் தடவியும் தெறித்தும் மீட்டப்படும். மயிற்பெடைகளும் சேவல்களும் கைகொட்டும் தாளத்துக்கு ஆடும்படி பயிற்றப்பட்டன. ஓவியமும், சிற்பமும் சுவர்களிலும் பலகைகள் மீதும் ஓவியங்கள் வரையப்பட்டன. அசந்தாக் குகை ஓவியங்களே அக்காலச் சித்திரங்களுக்கு எடுத்துக்காட்டு. சிறுவர் விளையாடும் அழகிய பாவைகளும், மற்றும் பிற விளையாட்டுப் பொருள்களும் செய்யப்பட்டன. சில அரண்மனைகள் ஒற்றைத் தூணுடையனவாகவும், சில எட்டுச் சதுரமுடைய ஆயிரந்தூணுடையனவாகவும் கூறப்பட்டுள்ளன. பெரிய நிலவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இறந்தவர்களின் உடல்களைப் புதைத்து அவைமீது கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. அங்குப் பூமாலைகள் தூக்கி நறும்புகை காட்டப்பட்டது. சில நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் மதியம் அமாவாசைக் காலங்களில் மக்கள் விரதமிருந்தார்கள். ஒருவன் தும்மினால் சாவில்லை அல்லது நீடு வாழ்க என்று சொல்லப்பட்டது. 1. துரானியர் எனப்படும் எல்லா மக்களிடையும் திங்களில் முயல் இருக்கிறதென்னும் நம்பிக்கையிருந்ததென உலக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். |