பக்கம் எண் :

தமிழ் இந்தியா89

முதலியன பலியிடப்பட்டன. உயிர்ப் பலிகள் நிறுத்தப்பட்டபின் இரத்தத்திற்குப் பதில் மரத்தில் குங்குமம் பூசப்படுகின்றதா யிருத்தல்கூடும்.

தண்டனை

  அக்காலத் தண்டனை, தண்டம், சிறை, உறுப்புகளைக் களைதல், சிரத்தைக் கோடரியாற் பட்டடையில் வைத்துத் தறித்தல் போன்றன.


இயல் - 4

புத்தருக்குப் பிற்பட்ட இந்தியா

   மெகஸ்தின் என்னும் கிரேக்கர் சந்திரகுத்த மயூரனின் அரண்மணையில் கி. மு. 302-முதல் சிலகாலம் தங்கியிருந்தார். இவர் இந்தியாவைப்பற்றிய ஒரு நூல் எழுதியிருந்தார். அதிற் காணப்படும் சில பகுதிகள் அக்கால இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை நன்கு விளக்குவன. அவர் கூறுவன :

இந்திய மக்களின் ஏழு பிரிவுகள்

  இந்தியர் ஏழுவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். தத்துவசாத்திரத்திற்றேர்ந்த ஒரு கூட்டத்தினர் முதற் குலத்தினராகக் கொள்ளப்பட்டனர். மற்றைக் கூட்டத்தினரைவிட இவர்களின் தொகை குறைவாயிருந்தது. இவர்கள் எசமானராகவோ வேலைக்காரராகவோ இருக்கவில்லை. மறு உலகத்திற்குரிய பொருள்களை எல்லாம் இவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என மக்கள் நம்பினார்கள். ஆகவே, அவர்கள் இவர்களைப் பிணச்சடங்குகள் புரிவதற்கும் உரிய காலங்களிற்