பக்கம் எண் :

92தமிழ் இந்தியா

இந்திய அரசாங்கம் இவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றது. தத்தம் கூட்டத்தைக் கடந்து மணம் முடிக்க எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. தமது வகுப்புக்குரிய தல்லாத தொழில் புரிவதற்கும் ஒருவரும் அனுமதிக்கப் படவில்லை. உதாரணமாகப் போர்வீரன் ஒருபோதும் பயிரிடுவோனாக வரமுடியாது; சிற்பி அறிவனாய் (தத்துவ சாத்திரி) வரமுடியாது.


மக்களின் பழக்கவழக்கம்

  இந்திய மக்கள் எல்லோரும் செட்டான வாழ்க்கையுடையவர். சிறப்பாக, கூடாரங்களில் தங்கும்போது இவர்கள் இவ்வாறிருக்கின்றனர். ஒழுங்கற்ற கூட்டத்தினரை அவர்கள் வெறுத்தனர். ஆகவே அவர்கள் ஒழுங்காக நடந்துகொண்டனர். களவு சிறிதாக இருந்தது. சந்திரகுத்தனின் கூடாரத்தில் 400,000 வீரர் தங்கினார்கள். எப்பொழுதாவது 200 திறாமச்1 பொன்னுக்கு அதிகமாகக் களவு நடந்ததாகக் கூறப்படவில்லை. அவர்களுக்கு எழுத்துமூலம் பிரமாணங்கள் கிடையா.

  அவர்கள் எழுத்தைப்பற்றி அறியார். கொடுக்கல் வாங்கல்கள் ஞாபகத்தைப் பொறுத்திருந்தன. ஆடம்பர மல்லாத வாழ்க்கை நடத்தியபோதும் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். வேள்விகளிலன்றி அவர்கள் மது அருந்தவில்லை. மது நெல்லிலிருந்து வடிக்கப்பட்டது. அரிசியாற் சமைத்த கஞ்சி அவர்களின் பிரதான உணவு. அவர்களின் சட்டங்களைக் கவனிக்கும்போது அவர்கள், அருமையாக வழக்குக்குச் சென்றார்கள். கொடுக்கல் வாங்கல்கள் ஒருவர் மற்றவரிடத்திற் கொண்ட நம்பிக்கையைக் கொண்டு நடைபெற்றமையால் பத்திரங்கள்


 1. 665, தானிய எடை.