எழுதப்படவில்லை. அவர்கள் வெளியே சென்றபோது வீட்டையும் வீட்டிலுள்ள பொருள்களையும் காப்பதற்கு எவரையும் நிறுத்தவில்லை. அவர்கள் எப்பொழுதும் தனிமையாகவே உணவருந்தினார்கள். இன்ன நேரத்தில் உணவருந்த வேண்டும் என்னும் நியதி இருக்கவில்லை; பசி கொண்ட நேரங்களில் ஒவ்வொருவரும் உண்டனர். உடம்பை உறைஞ்சுவதையே அவர்கள் சிறந்த உடற் பயிற்சியாகக் கருதினர். அதற்காகப் பலமுறைகள் கையாளப்பட்டன. அழுத்தமான கருங்காலி உருளைகளை உடம்பில் அழுத்தி உருட்டுவதே அவற்றுட் சிறந்தது. அவர்களின் சமாதிகள் ஆடம்பரமின்றி எளியவகையில் இருந்தன. சமாதிக்குமேல் மண்கொட்டி மேடு செய்யப்பட்டது. அவர்கள் அழகையும் அணிகலன்களையும் விரும்பினர். உடைகள் பொன்னினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆபரணங்களில் வயிரங்களும் விலையுயர்ந்த கற்களும் அழுத்தப்பட்டிருந்தன. பூவேலை செய்த மசிலின் துணிகளை அவர்கள் உடுத்தனர். பரிவாரங்கள் அவர்களின் பின்னாற் குடை பிடித்துச் சென்றன. உண்மையும் புகழும் போற்றப்பட்டன. அறிவுத்திறமில்லாத முதியவர்களுக்கு மதிப்புக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் பல பெண்களை மணந்தனர். அவர்கள் ஒரு சோடி எருதைப் பெண்களுக்கு விலையாகக் கொடுத்து அவர்களைப் பெற்றோர்களிடமிருந்து வாங்கினர். சிலர் தமக்கு வாழ்க்கைத் துணை வேண்டுமென்று மணஞ் செய்கின்றனர். பலர் இன்பத்திற்காகவும் வீடுகளைப் பல குழந்தைகளால் நிரப்புவதற்கும் மணஞ் செய்கின்றனர். வேள்விச் சாலைகளிலும் கடவுட் பூசைகளிலும் ஒருவரும் முடி அணியவில்லை. பலியிடும் விலங்குகள் வெட்டிக் கொல்லப்படவில்லை; மூச்சைப் பிடித்துத் திருகிக் கொல்லப்பட்டன. |