பக்கம் எண் :

94தமிழ் இந்தியா

பொய்சாட்சி சொல்வோனுக்கு கடுந்தண்டம் விதிக்கப்பட்டது. ஒருவனது உறுப்புக்குப் பங்கம் விளைத்தவனது அதே உறுப்பு வெட்டப்பட்டது; கையும் வெட்டப்பட்டது. சிற்பிகளின் கண்ணுக்கு அல்லது கைக்கு ஊறுவிளைத்தவன் கொலைசெய்யப்பட்டான்.

  அரசனுடைய உயிர் பெண்களின் கையில் இருந்தது. அப் பெண்கள் தாய் தந்தையரிடமிருந்து விலைக்கு வாங்கப் பட்டவர்களாவர். வாயிலுக்கு வெளியே காவலாளரும் போர் வீரரும் காவல்புரிந்தனர். அரசன் மதுவுண்ட மயக்கத்திலிருக்கும்போது அவனைக் கொன்றவள் இனி வரும் அரசனுக்கு மனைவியாகின்றாள். அரசன் பகலில் துயில்கொள்ளான். தனக்கு மாறாக நடக்கக்கூடிய சதிகளுக்குப் பயந்து அவன் அடிக்கடி தனது படுக்கையை மாற்றுவதுண்டு. போர்க்காலங்களில்மட்டு மல்லாமல் வழக்குத் தீர்ப்பளித்தற்கும் அவன் வெளியே செல்கின்றான். நீதி செலுத்தும் மண்டபத்தில் அவன் முழு நேரத்தையும் செலவிடுகிறான். அந்நேரத்தில் நான்கு வேலையாட்கள் அவனது உடம்பை மர உருளைகளால் உரைஞ்சுகின்றனர். உருளைகளால் உரைஞ்சும்போதே அவன் வழக்குகளை விசாரணை செய்கின்றான். வேட்டையாடுதற்கும், வேள்விச் சாலைகளிற் பலி செலுத்துதற்கும் அவன் வெளியே செல்கின்றான். வேட்டைக்குச் செல்லும் போது பெண்கள் பலர் அவனைச் சூழ்ந்து நிற்கின்றனர்1. இவர்களுக்குப்


1. அரசன் படுக்கையினின்று எழுந்ததும் வில்லுத்தாங்கிய பெண் கூட்டத்தினர் அரசனை எதிர்கொண்டார்கள். இவர்கள் அரசனது நெருங்கிய மெய்க்காப்பாளராவர். பெண் அடிமைகள் அவனது உடம்பைப் பிடித்து (massaged) குளிப்பாட்டி ஆடைகளை ஒலித்து, அவனைப் பூமாலைகளால் அலங்காரஞ் செய்தார்கள். அரண்மனையில் மூன்று தரத்தினராகிய மகளிர் இருந்தனர். தாழ்ந்த படியிலுள்ள கணிகையர் அரசனுக்குக் குடைபிடிக்கவும் பொற்குடத்தை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தப்பட்டனர். அடுத்தபடியிலுள்ள பெண்கள் விசிறியைக் கொண்டு சென்றனர். இவர்கள் அரசனுக்குப் பக்கத்தே கொலுவிருக்கை மண்டபத்தே இருந்து சேவித்தனர். இவர்களிலும் உயர்ந்த பெண்கள் அரசன் தேரிற் செல்லும்போது அல்லது சிங்காசனத்தில் இருக்கும்போது சேவித்தனர். இவர்களில் வயது சென்றவர்கள் சமயலறையில் சேவிக்கும்படி அனுப்பப்பட்டனர். இக்கணிகைப் பெண்கள் 24,000 பணங்கள் கொடுத்து விடுதலை பெற்றுத் தாம் விரும்பியவாறு வாழ்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டார்கள். எட்டு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அரசனின்முன் பாடவும் ஆடவும் அமர்த்தப்பட்டார்கள். இவை கௌடலியர் கூறியவற்றால் விளங்குகின்றன. கி. மு. இரண்டாம் நூற்றாண்டைய பர்குற் [Bharhut sculputre] சிற்பத்தில் முற்றாக ஆயுதந்தரித்த பெண் குதிரைமீது இருந்து கொடியைப் பிடிக்கும் உருவம் காணப்படுகின்றது. --Chandragupta Mauurya and his times--Radha Kumud Mookerji--P. 97.