புறத்தே ஈட்டி தரித்த வீரர் சூழ்ந்து நிற்கின்றனர். வீதிகளிற் கயிறுகள் கட்டப்பட்டிருக்கின்றன. கயிற்றைக் கடந்து செல்லும் ஆண் அல்லது பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகின்றது. மேளம், சல்லரி முதலிய வாத்தியங்களோடு பரிவாரங்கள் செல்கின்றன. அரசன் வளைத்தடைக்கப்பட்ட இடத்தே உயரமான இடத்தில் நின்று அம்புகளை எய்கிறான். அவனுக்குப் பக்கத்தில் இரண்டு அல்லது மூன்று ஆயுதந் தரித்த பெண்கள் நிற்கின்றனர். வெளியிடங்களில் வேட்டையாடும்போது அரசன் யானையின் அம்பாரி மீதிருந்து அம்புகளை எய்கிறான். பெண்கள் சிலர் தேர் மீதும் சிலர் யானை மீதும் செல்கின்றனர். போருக்குச் செல்வதை ஒப்ப அவர்கள் பல ஆயுதங்களைத் தாங்கிச் செல்கின்றனர். அரசாங்க அமைப்பு அரசாங்க உத்தியோகத்தரிற் சிலர் சந்தைகளையும், சிலர் இராணுவத்தையும், சிலர் நகரத்தையும் மேற்பார்க்கின்றனர். சிலர் ஆறுவழியாக நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சுவதையும், சிலர் நில அளவைகளையும், சிலர் ஆற்றின் சிறிய கால்வாய்களால் நீர்செல்லும் |