மடைகளையும் கவனிக்கின்றனர். சிலர் விறகு வெட்டுவோர், தச்சுவேலை, கொல் வேலை, சுரங்க வேலை முதலியன புரிவோரை மேற்பார்த்து வரி அறவிடுகின்றனர். இவர்கள் வீதிகளையும் அமைக்கின்றனர். தூரத்தையும் கிளைப்பாதைகளையும் அறிவிக்கும் கற்கள் மைலுக்கு ஒன்று நடப்பட்டுள்ளன. நகர ஆட்சி ஆறு சபையினரால் நடத்தப்படுகின்றது. முதற்பிரிவினர் கைத்தொழில் தொடர்பான எல்லாவற்றையும் கவனிப்பர். இரண்டாவது பிரிவினர் பிற நாடுகளினின்றும் வருவோரைக் கவனித்து அவர்கள் தங்குவதற்கேற்ற வசதிகளைப் புரிவர். அப் புதியவர்களுக்குத் துணையாகவிருப்போர் அவர்களின் போக்கைக் கவனித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கின்றனர். பிற நாட்டவர்கள் இறக்கநேர்ந்தால் அவர்களின் உடைகள் உறவினரிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன. மூன்றாவது பிரிவினர் நாட்டில் ஏற்படும் இறப்புப் பிறப்புகளைக் கவனிக்கின்றனர், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கிடையிலும் நேரும் இறப்புப் பிறப்புக்கள் தவறாமல் பதிவுசெய்யப்படுகின்றன. நான்காவது பிரிவினர் சந்தைகளைக் கவனிக்கின்றனர். இவர்களே நிறைகளுக்கும் அளவுகளுக்கும் பொறுப்பாயுள்ளோர். மக்களுக்கு விளம்பரஞ் செய்தபின் காலத்திற் கிடைக்கும் விளைபொருள்கள் பகிரங்கத்தில் விற்கப்படுகின்றன. ஒன்றுக்கு அதிகமான பண்டங்களில் வாணிகம் புரிய எவரும் அனுமதிக்கப்பட்டிலர். ஐந்தாவது பிரிவினர் கைத்தொழிற் பொருள்களைக் கவனிக்கின்றனர். புதிய பொருள்களும் பழைய பொருள்களும் வெவ்வேறாக வைத்து விற்கப்படுகின்றன. புதியவற்றையும், பழையவற்றையும் கலந்து விற்போருக்குத் தண்டம் விதிக்கப்படுகின்றது. ஆறாவது பிரிவினர் வாணிபப் |