பக்கம் எண் :

தமிழ் இந்தியா97

பொருள்களின் விலையிற் பத்திலொன்றை அற விடுகின்றனர். இவ்வாறு ஆறு பிரிவினர்களும் கடமையாற்றுகின்றனர். இவர்கள் ஒன்றுசேர்ந்து பொதுக்கட்டிடங்களின் புழக்கம், அவற்றின் பழுதுபார்ப்பு, பண்டங்களின் விலை, சந்தை, துறைமுகம், கோயில்கள் முதலியவற்றிற்குப் பொறுப்பாயிருக்கின்றனர்.

  நகரின் நியாய அதிகாரிகள் இராணுவத்தை நடத்துவிக்கின்றனர். இவர்கள் ஐந்து உறுப்பினர் அடங்கிய ஆறு சபைகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றனர். ஒன்று, கடற்படை அதிகாரியோடு ஒத்துழைக்கின்றது. இரண்டாவது போருக்குரிய இயந்திரங்களையும், போர்வீரரின் உணவையும் பிற பொருள்களையும் கொண்டு செல்லும் எருதுகளையும் வண்டிகளையும் கவனிக்கின்றது. இது, வேலையாட்களையும், பறைகொட்டுவோரையும், சல்லரிபோடுவோரையும், குதிரைப் பாகரையும், இயந்திரம் பழுது பார்ப்போரையும் அவர்களின் உதவியாளரையும் அளிக்கின்றது. சல்லரிகளாற் செய்யப்படும் ஓசையை அறிந்து வேலையாட்கள் குதிரைகளுக்குப் புல் கொண்டு வருகின்றனர். மூன்றாவது பிரிவு காலாட்படைக்குப் பொறுப்பாயிருக்கின்றது. நாலாவது குதிரைப்படைக்கும், ஐந்தாவது தேர்களுக்கும், ஆறாவது யானைப்படைக்கும் பொறுப்பாயிருக்கின்றன. அரசனின் ஆயுதச்சாலை யுண்டு. ஒவ்வொரு போர்வீரனும் 1ஆயுதங்களை ஆயுதச் சாலையிலும், குதிரையை அல்லது யானையைப் பந்தியிலும் விட்டுச்


  1. அக்கால வீரர் பயன்படுத்திய படைக்கலங்களுள் வளைதடி ஒன்று. இது ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் பயன்படுத்தும் பூமறாங் என்னும் தடியே என ஆராய்ச்சியால் தெரிகின்றது. அதனை ஓர் இலக்கை நோக்கி எறியின் அஃது இலக்கிற்பட்டு மீண்டும் திரும்பி வரும். டாக்டர் ஒப்பேட் என்பார் இதைக்குறித்து எழுதியிருப்பது பின்வருமாறு:

  Dr. Oppert says, "this general belief that the bumerang is a weapon peculiar to Australians, but this is by no means the case.
த. இ.-II--7