பக்கம் எண் :

     102
 
     வடகிழக்கில் சீட்புளிநாடும் பாகநாடும் பரமன்மழபாடியார் என்ற படைத்தலைவன்
மூலம் கைப்பற்றப்பட்டன. கிழக்குச் சாளுக்கிய அரசில் ஏற்பட்ட ஒரு அரசுரிமைப்
போராட்டத்தில் ஒரு பக்கத்தை ஆதரித்ததன் மூலம் இராசராசன் அந்நாட்டையும்
வென்று, அதன் புதிய அரசனின் நேசத்தைப் பெற்றான். விமலாதித்தியன் என்ற அந்தக்
கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராசனின் மகள் குந்தவையை மணந்துகொண்டான்.
இராசராசனின் போர் வெற்றிகள் மகேந்திரகிரியில் வெற்றித் தூண்களில்
பொறிக்கப்பட்டன.
 
     1001-ம் ஆண்டில் இராசராசன் தன் பேரரசிலுள்ள நிலங்களை எல்லாம் அளந்து
கணக்கிடுமாறு பணித்தான். இப்பெரும் பணியைச் செய்துமுடித்தவன் இராசராச
மகாராசன் என்றும், சேனாபதி குறவன் உலகளந்தான் என்றும் குறிக்கப்படுகிறான்.
 
     தந்தையின் காலத்திலேயே இராசராசன் மகன் இராசேந்திரன் கங்க மண்டலத்தில்
தண்டநாயகனாக கடும்பணி ஆற்றினான். 1012-ல் அவன் இளவரசனாகவும் முடிசூட்டப்
பெற்றான்.
 
     இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயில் தேவார காலத்துக்குப்
பிற்பட்டதாதலால் பாடல் பெறப்படவில்லை. ஆனால் இராசராசன் காலத்திலிருந்த
கருவூர்த்தேவரால் அதற்குத் திருவிசைப்பாவில் பதிகம் பாடப்பட்டுள்ளது.
 
     இராசராசன் சிவபெருமானிடம் பற்றுள்ளவனாயினும் சமரசப் பான்மையுடன்
திருமால்நெறி முதலிய பிறநெறிகளுக்கும் ஆதரவளித்தான். கடல்கடந்த கீழ்த்திசைப்
பேரரசனான ஸ்ரீவிஷய கடாகவேந்தன் ஸ்ரீமார ஸ்ரீவிஜயோத்துங்கவர்மன் தன் தந்தை
பெயரால் கட்டிய சூடாமணி விகாரம் என்ற புத்தப்பள்ளிக்கு அவன் ஆனைமங்கலம்
என்ற ஊரைக் கட்டளை வகுத்தான்.
 
     இராசராசன் ஆட்சி இறுதியில் சோழப் பேரரசு சென்னை மாகாணத்தையும்
மைசூரையும் இலங்கையின் பெரும்