மண்ணைக் கடகம் ஹைதராபாதுக்கு வடக்கிலும் கலியாணி இன்னும் வடக்கிலும் உள்ளன. |
மேலைச்சாளுக்கியர் தோல்விகளடைந்தாலும் முற்றிலும் வீழ்ந்துவிடவில்லை. சோழப் பேரரசர் ஆட்சியுள் புகாத பகுதி இது ஒன்றே. |
இலங்கையில் முந்திய ஆட்சியில் வெல்லப்படாதிருந்த தென்கோடிப் பகுதியையும் இராசேந்திரன் வென்றான். இதனால் இலங்கையிலிருந்த பாண்டியன் முடிமட்டுமன்றி, இலங்கை அரசன் அரசி முடிகளும் அவன் கைப்பட்டன. |
ஆனால் ஆட்சி இறுதியில் தென்கோடிப்பகுதி மட்டும் மீண்டும் சோழர் கையினின்று கிளர்ந்தெழுந்து தனியாட்சி அடைந்தது. |
சேர அரசன் முடியும் கைக்கொள்ளப்பட்டு அப்பகுதி சோழர் நேராட்சிக்கு வந்தது. அத்துடன் இலக்கத்தீவம் முதலிய தீவுகளும் கீழடக்கப்பட்டன. |
இராசேந்திரன் ஆட்சியில் இரண்டாண்டுகள் கங்கைக் கரையிலுள்ள நாடுகளை வெல்வதில் ஈடுபட்டன. அவனால் வெல்லப்பட்ட அரசுகள் இந்திராதன், ரணசூரன், தர்மபாலன், கோவிந்தசந்திரன் ஆகியவர்கள். இவர்கள் ஆண்ட பகுதிகள் கங்கை வெளியில் இன்று பீகார், வங்காளம், கோசலம் என்று அழைக்கப்படும் பகுதிகள் ஆகும். |
இராசேந்திரனின் வடபுலப் போர்ப் பயணத்தில் ஒரு பகுதியாகக் கன்னோசிப்போர் அமைந்திருந்தது. இதில் பல வட அரசர் படைக்குழுவின் தலைமையில் அவன் முகமது கஜினியை வென்றான் என்று சில வரலாற்று ஆசிரியர் கருதுகின்றனர். சிந்து வெளியில் பதினெட்டுத் தடவை படையெடுத்துச் சூறையாடி இவ் ஆஃவ்கன் அரசன் கன்னோசி தாண்டிக் கங்கை வெளிக்கு வராதது இதனாலேயே என்றும் கூறப்படுகிறது. |