இராசேந்திரன் வடபுல யாத்திரை, சேரன் செங்குட்டுவன் யாத்திரையை நினைவூட்டுவது ஆகும். இருவருமே சிந்து கங்கை வெளிக்கு அப்பாலுள்ள ஓர் அயலரசன் தாக்குதலைத் தடுத்து நிறுத்தி அப்பெரும் பரப்பைக் காக்க முற்பட்டனர். |
வங்காளத்தில் ஆண்ட சேன மரபினரும் கர்நாடக மரபினரும் இராசேந்திர சோழனுடன் சென்று தங்கிய தென்னாட்டு மரபினர்களே யாவர் என்று வரலாற்றறிஞர் ஆர்.டி.பானர்ஜி குறித்துள்ளார். |
கடல் கடந்த ஸ்ரீ விஜயப் பேரரசுடன் இராசேந்திரன் தொடக்கத்தில் நேசத் தொடர்பு கொண்டிருந்தான். தந்தை காலத்தில் அக்கடல் கடந்த பேரரசன் கட்டிய புத்தப்பள்ளிக்குத் தரப்பட்ட மானியத்துக்கு அவன் அப்பேரரசன் வேண்டுகோளால் செப்புப் பட்டயம் அளித்தான். ஆயினும் எக்காரணத்தாலோ 1036க்குப் பின் இருபேரரசுகளுக்கு மிடையேபோர்மூண்டது. ஸ்ரீ விஜய நாட்டின் அரசுரிமைப் போரில் ஒரு சார்பினருக்கு உதவவே இது நிகழ்ந்ததாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஆனால் கடல்கடந்த இப்போரில் இராசேந்திரன் வெற்றி கண்டான். அதன் மூலம் அப் பேரரசின் பகுதிகளான அந்தமான் தீவுகள், நிக்கோபார்த் தீவுகள், தென்பர்மா அல்லது பெகு, மலாயா, சுமாத்ரா ஆகிய பகுதிகள் சோழப் பேரரசின் மேலாண்மையை ஏற்றன. |
சுமாத்ராவில் இவ்வாட்சிக்குரிய தமிழ்க் கல்வெட்டுக்கள் காணப்பெறுகின்றன. |
1036-க்குப் பின் இராசேந்திரன் பேரரசின் பல பகுதிகளின் ஆட்சியையும் போர்களையும் புதல்வர்கள் மூலமே நடத்தினான். கங்கைகொண்டான், கடாரம்கொண்டான் முதலிய பல விருதுகளை அவன் மேற்கொண்டான். அவற்றுள் கங்கைகொண்டான் என்ற பெயரையே அவன் தனக்குரிய பெருஞ்சிறப்பாக நினைத்தான். சோழர் தலைநகரையும் அவன் தஞ்சையிலிருந்து மாற்றி, கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயருடைய புதிய தலைநகரை |