பக்கம் எண் :

     106
 
உண்டுபண்ணினான். பின்வந்த எல்லாச் சோழருக்கும் இதுவே தலைநகரமாயிருந்தது.
 
     இளவரசர்கள் முயற்சியால் பாண்டியர், சேரர், இலங்கை மன்னன் ஆகிய
மூவருடைய கிளர்ச்சிகளும் அடக்கப்பட்டன. பூண்டிப் போரில் இராசேந்திரன் புதல்வன்
இராசேந்திரனால் மேலைச்சாளுக்கிய அரசன் ஆகவமல்லன் தோற்கடிக்கப் பெற்றான்.
அவன் புதிய தலைநகரான கலியாணியும் அழிக்கப்பட்டது. தாராசுரம் கோயிலிலுள்ள
ஒரு துவாரபாலகர் உருவின்கீழ், அது அனலெரியூட்டபப்டட கலியாணிபுரத்திலிருந்து
கொண்டு வரப்பட்டது என்ற செய்தி குறிக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்புப் பண்பும்
சோழர் கலைப்பண்புக்கு மாறாகவே இருக்கிறது.
 
சோழர் மூவர்
 
     முதலாம் இராசேந்திரனுக்குப் பின் அவன் புதல்வர் மூவர் ஏறத்தாழ
தொடர்ச்சியாக ஆண்டனர். அவர்களே முதலாம் இராசாதிராசன் (1013-1054) இரண்டாம்
இராசேந்திரன் (1054-1064), வீரராசேந்திரன் (1063-1069) ஆகியவர்கள். மூவரும்
வீரர்களாதலால் அவர்கள் பேரரசின் எல்லை குன்றாமல் காத்து நின்றனர். கொப்பம்
போரில் இராசாதிராசன் மேலைச் சாளுக்கியரை எதிர்த்து நின்று ஆனை மீதிருந்து
மாண்டான். இதனால் இவன் 'ஆனைமேல் துஞ்சின சோழன்' எனப்பட்டான். அவன்
இளவல் இரண்டாம் இராசேந்திரன் படைக்களத்திலேயே முடிசூட்டிக்கொண்டு
போர்க்களத்தின் தோல்வியை வெற்றியாக மாற்றினான்.
 
     இரண்டாம் இராசேந்திரன் காலத்தில் மேலைச்சாளுக்கிய அரசனான
சோமேசுவரனின் வீர மைந்தன் விக்கிரமாதித்தியன் கீழைச்சாளுக்கியரிடமிருந்து
வேங்கியைக் கைக்கொண்டு அதன் வடபாலுள்ள சக்கரக்கோட்டம் அல்லது
சித்ரகூடத்தையும் வென்றான். ஆனால் சில நாட்களுக்குள் முடக்காறு, கூடல் சங்கமம்,
சக்கரக்கோட்டம் ஆகிய வடமுனைகளில் வெற்றி கண்டு