பக்கம் எண் :

140
 
தற்காலம்

(19-20 நூற்றாண்டுகள்)

     பதினாயிரக்கணக்கான ஆண்டு நாகரிகம் வளர்த்து, ஆயிரக்கணக்கான
ஆண்டுகள் தன்னாண்மையுடன் கடல் கடந்து வாணிகமும் செங்கோலும் ஓங்கியது
தென்னாடு, ஆனால் வேற்றுமைகள் வளர்ந்து, ஒற்றுமை தவறிக் கெட்டு, போட்டி
பொறாமை தன்னலம் அடிமை மனப்பான்மை ஆகியவைகள் மலிந்த ஓர்
இடைவேளையில் அயலினம், அயல்நாடு, அயல்நெறி தென்னாட்டில் கால்வைக்க இடம்
பெற்றது. தென்னாட்டையே தளமாக்கி அது கீழையுலகில் படர்ந்து அதில் ஒரு பேரரசை
ஏற்படுத்திற்று. அதுவே பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு. ஆனால் தென்னாட்டின்
பேரரசுகளில் பேரரசின் ஆட்சிக் காலத்துக்கு மேற்பட அது கீழ்நாட்டில் நிலவ
முடியவில்லை.
 
பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு
 
     1857 வரை பிரிட்டிஷ் வாணிகக் கழகமே ஆண்டது. 1856 லிருந்து 1947 வரை
வாணிகக் கழகத்தின் ஆட்சி முடியாட்சியாக மாறி, கீழை உலகில் ஓர் இந்தியப்
பேரரசை அமைத்தது. இவ்வரசினுள் தென்னாடு மட்டுமன்றி, சிந்து கங்கை சமவெளியும்
பர்மாவும் பலுசிஸ்தானும், அந்தமான் முதலிய கடல் கடந்த தீவுகளும் ஏடன் போன்ற
கடல் கடந்த துறைமுகத்தளங்களும் அடங்கியிருந்தன. சோழப் பேரரசைப் போலவே
கடல் கடந்த பேரரசாக பிரிட்டிஷ் பேரரசும், அதன் ஒரு நடுநாயகப் பெரும் பகுதியாக
இந்தியப் பேரரசும் நிலவின.
 
     சோழருக்கு முற்றிலும் தலைவணங்க மறுத்த வணங்காமுடிப் பாண்டிய மரபினர்;
பாண்டியருக்கு அடங்காது திமிறியெழுந்து