உட்பகையை வெல்லப் பயன்படாது என்பதே அந்தப் படிப்பினை! வேற்றுமை, அடிமை மனப்பான்மை, தன்னலப் போட்டி, பொறாமை ஆகியவை அயலாட்சியின் பயனாக ஏற்படுபவை என்பதைவிட, அதை வருந்தி வரவழைக்கும் மூலகாரணங்கள் என்பதே பொருத்தமானது. | கல்வியறிவிலும் அரசியல் வாழ்விலும் மக்களில் ஒரு சிறு பகுதியினரே ஈடுபட்டிருக்கும் எந்த நாடும் நீண்ட நாள் தன்னாட்சியுடன் இருக்க முடியாது; தன்னாட்சியுடன் இருக்கும் காலத்திலும் தன் நாகரிகத்தைப் பிறருக்கு வழங்க முடியுமேயன்றித் தனக்குப் பயன்படுத்த முடியாது. | மக்கள் விடுதலை ஆர்வம் | பிரிட்டிஷ் ஆட்சியில் தென்னாட்டு மக்களிடையே அறிவு எல்லா வகுப்பினரிடையேயும் ஓரளவேனும் பரந்தது. அரசியலில் மக்களின் எல்லாப் பகுதியினரும் படிப்படியாக இடம் பெற்றனர். விடுதலையார்வம் முன்போல் ஆள்பவர் விடுதலையார்வமாக இராமல், முதன் முதலாக மக்கள் விடுதலை ஆர்வமாகத் தொடங்கிற்று. அவ்வார்வத்தை வ.உ.சிதம்பரனார், பெரியார் ஈ.வெ.ரா., திரு.வி.கலியாணசுந்தரனார், கலையறிஞர் சி.என்.அண்ணாத்துரை, சக்ரவர்த்தி சி. இராசகோபாலாச்சாரியார், ஆகிய தென்னாட்டுத் தலைவர்களும், தென்னாடு கடந்த மாநிலத்தில் பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, வங்கச் சிங்கம் தலைவர் பெருந்தகை போஸ், பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களும் விடுதலைப் பேரியக்கமாக வளர்த்து, பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவினர். தென்னாட்டுத் தேசீய வாழ்வை அவர்கள் விட்ட இடத்திலிருந்து மேற்கொண்டு முன்னேறத் தென்னாட்டு மக்கள் இனி பாடுபடவேண்டும். | சமூக சீர்த்திருத்த இயக்கங்கள் | தமிழகத்தில் சித்தர்கள் மக்களுக்குச் சமய அறிவோடு சமூகச் | | |
|
|