மடங்களில் உறங்கிக் கிடந்த சங்க இலக்கியங்களின் எச்சமிச்சங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வெளிவந்துள்ளன. தமிழகத்துக்கு வெளியே அறிஞர் உலகம் அவற்றை இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே காணத் தொடங்கியுள்ளது. ஆங்கில மூலம் கிடைத்த பகுத்தறிவு இப்பெரும் பேரிலக்கியத்தின் பண்பறிந்து முன்னேறத் தமிழகத்துக்கு உணர்வூட்ட வல்லது. |
ஆந்திர நாட்டில் அறிஞர் சி.ஆர். ரெட்டி போன்ற பெரியார் தெலுங்கிலும் புதையுண்ட பழம்பேரிலக்கியங்களைத் தேடி வெளியிட்டுள்ளனர். ஒரு வேளை வருங்காலத்தில் இன்று நமக்குக் கிடைத்துள்ளதைவிடப் பழமையான, இடைக்கால அடிமை இலக்கியங்களுக்கு முற்பட்ட, பேரிலக்கியங்கள் தமிழிலும் பிற தென்னாட்டு மொழிகளிலும் கிடைத்தல் கூடும். தென்னாட்டவர் தம் நாட்டின் மெய்யான பண்பையும் உள்ளுரத்தையும் உணர்ந்து மேனாடுகளை எட்டிப்பிடிக்க அவை மேலும் தூண்டக்கூடும். |
இந்திய தேசீய நாட்டாண்மைக் கழகம் |
பிரிட்டிஷ் ஆட்சியிலேயே தூங்கிக்கிடந்த தென்னாட்டு மக்களின் குடியாட்சிப் பண்புகள் தட்டி எழுப்பப்பட்டன. சிறுநிலத் தன்னாட்சி நிலையங்கள் நிறுவப்பட்டதுடன் பெருநில (State) மன்றங்களிலும் நடுமன்றங்களிலும் படிப்படியாக தேர்வு முறை, பேராண்மை ஆட்சி முறை (Representative Methods of Government) மெள்ள மெள்ளப் புகுந்தன. மக்களிடையே இவற்றைக் கையாள்வதற்குரிய அரசியலறிவை வளர்ப்பதற்காகத் தென்னாட்டவர் பலரும் மற்ற நாட்டறிஞரும் ஆங்கில அறிஞரும் சேர்ந்து 1885-ல் இந்திய தேசீய நாட்டாண்மைக் கழகம் (Indian National Congress) என்று ஒரு மாபெரும் பேரவையைத் தோற்றுவித்தனர். தோற்றுவித்தவர்கள் நோக்க எல்லையிலேயே அது 1907 வரையில் நின்று மன்னரும் பெருஞ்செல்வரும் நிறைந்த மாநாடுகளைக் கூட்டிற்று. |
கங்கை வெளியின் கீழ்கோடியிலுள்ள வங்கமும் தென்னாட்டின் தென்கோடியிலுள்ள தமிழகமும் 1907-ல் மண்கீண்டெழும் |