ஒரே செடியின் இருமுனைகள் போலக் கிளர்ந்தெழுந்தன. ஒருமொழி பேசிய வங்கத்தை இரண்டுபடுத்த முனைந்த பிரிட்டிஷ் ஆட்சி முதல்வன் கர்சானை நோக்கிக் கர்ச்சனை புரிந்தது வங்கம். வங்கக் கடலில் வங்கத்தை மிதக்கவிட்டு வங்கப்போர் புரிந்தது தமிழகம். வங்கக் குரலும் பாஞ்சாலங்குறிச்சிக் குரலும் வ.உ.சி. யின் கப்பல் இயக்கமாகவும் தொழிலாளர் இயக்கமாகவும் முழங்கின. சிவாஜியின் குரல் மராட்டியத்தில் திலகர் குரலாக எதிரொலித்தது. | கடல் வாணிகம் செய்த தமிழகத்துக்கு இணையாகக் கரை வாணிகம் செய்ய முற்பட்ட கூர்ச்சரமும் மூன்று குரலையும் இணைத்து மகாத்மா காந்தியை அளித்தது. | மறமிக்க அரசியலில் வள்ளுவர் அறத்தைக் கலந்து, புதிய அரசியல் போராட்டமுறை வகுத்தார் காந்தியடிகள். அவர் கொடி ஏந்திப் பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர் வரதராஜு லு நாயுடு, திரு.வி.கலியாணசுந்தரனார், எஸ். சத்தியமூர்த்தி, சி. இராசகோபாலாச்சாரி ஆகியோர் தமிழகத்தின் முழு வலிமையையும் விடுதலைப் போரில் ஈடுபடுத்தினர். ஆந்திரகேசரி பிரகாசம், நாகே சுவரராவ் பந்துலு ஆகியோர் ஆந்திரத்தில் விடுதலைப் பேரிகை முழங்கினர். பெரியார் ஈ.வெ.ரா., கேளப்பன் முதலியவர்கள் முயற்சிகளால் கேரளமும் கிளர்ந்தெழுந்தது. | விடுதலைப் போராட்டங்கள் | குடியானவர் புரட்சிகளிலும், குடிசைத் தொழில் இயக்கங்களிலும், சட்டமறுப்புக்களிலும் கருநாடகம் தமிழகத்துடனும், கூர்ச்சரம், பாஞ்சாலம் ஆகிய மண்டலங்களுடனும் போட்டியிட்டு நின்றது. | 1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், 1930-ல் நடை பெற்ற உப்புப்போர் அல்லது சட்டமறுப்பு இயக்கம், 1942-ல் நடைபெற்ற 'வெள்ளையனே வெளியே போ' என்ற குரல், அதே | | |
|
|