பக்கம் எண் :

17

 
     கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப்பின் கங்கை சிந்து சம வெளியிலுள்ள புதிய
ஆரியக் கலவை மொழிகளின் பண்புகள் தென்னாட்டிலும் சிறிது சிறிதாகப்
புகத்தொடங்கின. இவை சிந்து வெளியில் ஏற்பட்டது போன்ற குடியேற்றங்களாகவோ,
கங்கை வெளியில் ஏற்பட்டது போன்ற அரசியல் படையெடுப்பு களாகவோ
அமையவில்லை. அவை சிறுசிறு அளவிலேயே நடைபெற்றன. வடகிழக்கு, வடமேற்கு
ஆகிய இரு இடங்களிலும் அவை ஒரியா, குசராத்தி, மராத்தி ஆகிய தென் ஆரிய
மொழிகளை அதாவது தென்னாட்டு ஆரிய மொழிகளை உண்டுபண்ணக்
காரணமாயிருந்தன.
 
     மொழி வகையில் தென்னாடு முழுவதும் ஆரிய மொழிக் கலப்பு ஏற்படத்
தொடங்கியது கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயேயாகும். இதனால் தென்னாட்டு
மொழிகள் ஒன்றுக்கொன்று நாளடைவில் பலவகையாக வேறுபாடுற்றன. ஆயினும்
அவற்றின் அடிப்படைப் பண்புகள் மாறாது நிலைபெற்று விட்டன. தமிழ்
அவ்வடிப்படைப் பண்பை விடாது காத்துப் பேணி வளர்த்து வருகிறது.
 
     இங்ஙனம் பழமைச் சிறப்பு, புதுமைச் சிறப்பு, தொடர்ச்சியான நீண்டகலை நாகரிக
வாழ்வு ஆகிய மூவகைச் சிறப்புக்களும் வாய்ந்தது நம் தென்னாடு, வருங்கால உலகிலும்
அதற்குச் சீரிய இடம் இருக்கும் என்பது உறுதி.
 
     மனித நாகரிகத்தின் வளர்ச்சி அதன் வருங்காலத்தை நோக்கிய உயர்ச்சியாகும்.
ஆனால் வளர்ச்சிக்கு ஏற்ற நிலமாய் உதவுவது நிகழ்காலமே. பழைமை
அவ்வளர்ச்சிக்குரிய வித்தாகும். பழைமையின் பண்பு அதாவது நீடித்த வாழ்வின்
படிமானமான இயற்கை அறிவு அவ்வளர்ச்சிக்கு உதவும் உரமாக அமைகின்றது.
தென்னாட்டின் நீள் பழைமையும், இடையறா நீள் வளர்ச்சியும் உலக நாகரிகத்துக்கு
நல்விதையாகவும், ஊட்ட மிகுந்த