பக்கம் எண் :

19

 
     இவ் இருவகைகளிலும் நமக்குப் பேருதவியாக வல்லது தென்னாட்டு வரலாறே.
அதைத் தென்னாட்டார் அனைவரும். ஆடவரும் பெண்டிரும், முதியோரும்
இளைஞரும், உள்ளதை உள்ளவாறே ஆய்ந்துணர்வது இன்றியமையாதது. சிறப்பாக,
வருங்கால உலகின் சிற்பிகளான இளைஞர், நங்கையர், மாணவ மாணவியர்,
பகுத்தறிவாராய்ச்சிப் பண்புடனும், விருப்பு வெறுப்பற்ற ஒருதலை சாயா நடுநிலைப்
பண்புடனும் இத்துறையறியவைக் கற்று விளக்கம் பெறுவதற்கு உரியவர் ஆவர்.