பக்கம் எண் :

20

 
சிந்துவெளி தரும் ஒளி

கி,மு.3250-2500
 

     அரசியல் வரலாறு, நாகரிகம் பண்பாடு ஆகியவற்றின் வரலாறு, மெய்விளக்க
வரலாறு என வரலாறு மூன்று வகைப்படும். மன்னர் பெயர் வரிசைப் பட்டியல்,
அவர்கள் போர்கள், வெற்றி தோல்விகள், ஆகியவற்றின் தொகுப்பே அரசியல்
வரலாறாகும். ஒவ்வொரு காலத்திலும் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைகள்,
அவ்வக்கால முன்னேற்றங்கள், வளர்ச்சி தளர்ச்சிப் பண்புகள் ஆகியவற்றை வகுத்துக்
காட்டுவது நாகரிகப் பண்பாட்டின் வரலாறாகும். நிகழ்ச்சிகள், பண்புகள் ஆகியவற்றைக்
காரண காரியத் தொடர்புபடுத்துவது மெய்விளக்க வரலாறாகும். இறந்த கால வரலாறு
கொண்டு நிகழ்காலத்தை விளக்குவதும்; வருங்காலத்துக்கான திட்டங்களை
வகுத்துரைப்பதும்; ஒரு நாட்டு வரலாற்றுடன் பிறநாட்டு வரலாறுகளை இணைப்பதும்;
நாடு கடந்த மனித இன வளர்ச்சிக்கு வழி காட்டுவதும் மெய்விளக்க வரலாறேயாகும்.
 
     அரசியல் வரலாற்றைவிட நாகரிக வரலாறும், நாகரிக வரலாற்றைவிட மெய்விளக்க
வரலாறும் சிறந்தவை. ஆயினும் கால வரையறைக்கும், தொடர்ச்சிக்கும் அரசியல்
வரலாறே பெரிதும் உதவுவதால் அதுவே இன்றும் அடிப்படை வரலாறாக இருக்கிறது.
 
     தென்னாட்டின் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், நாணயங்கள்
ஆகியவற்றின் ஆராய்ச்சியால் நாம் சென்ற இரண்டாயிர ஆண்டு வரலாற்றை ஓரளவு
தொகுக்க முடிகிறது. அதற்கு முற்பட்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில மரபுகள் வந்து
எட்டியுள்ளன. ஆனால் அவை எந்த அளவு மெய்,