காட்டுநிலம் அல்லது முல்லைத் திணையிலே மனிதன் நடோடியாக வாழ்க்கையைத் தொடங்கினான். நாடோடிக் குழுக்கள் அல்லது சாத்துக்கள் நாளடைவில் குலங்களாய் சமூகத்தின் வித்தாயின. இப்பருவத்தில் மனிதன் ஆடுமாடு முதலியவற்றைப் பழக்கி, உணவு தரவும் சுமை தூக்கவும் பயன்படுத்தினான். அவன் அங்கங்கே குடிசைகள் கட்டி வாழ்ந்து அக்குடிசைகளை அடிக்கடி தூக்கிச் சென்றான். தினை அரிசி, மூங்கிலரிசி ஆகியவற்றை அவன் வாரி வந்து சமைத்து உண்டான். |
மனிதனின் முதன் முதல் செல்வம் மாடு. தமிழில் மாடு என்ற சொல் எருது, செல்வம் என்ற இருபொருளும் உடையது. இலத்தீன் முதலிய பிற மொழிகளிலும் *இவ்விரு பொருளும் ஒரு சொல்லில் அமைந்துள்ளன. |
முல்லை நில மக்கள் ஆயர் எனப்பட்டனர். பெரிய மந்தையையுடையவன் தலைவன் ஆனான். ஆயன், ஐயன் என்ற பெயர்கள் தமிழில் தலைவன் என்று பொருள்படும். அத்துடன் தமிழில் 'கோ' என்னும் பெயர் பசுவையும் அரசனையும், 'கோன்' என்பது மாடு மேய்ப்பவனையும் அரசனையும் குறிக்கும். முதல் முதல் அரசு ஏற்பட்டது இந்நிலத்திலேயே என்பதை இது காட்டுகிறது. 'கோ' இருந்த மனையே கோட்டை ஆயிற்று. பிற்காலத்திலும் அரசன் மனை அரண்மனை அதாவது கோட்டை வீடு எனப் பெயர் பெற்றது காணலாம். கோயில் என்ற சொல் அரசன் மனையையும் கடவுள் வழிபாட்டு இடத்தையும் ஒருங்கே குறிக்கிறது. அரசியல் வாழ்வைப்போலவே சமய வாழ்வும் இந்த நாகரிகப் படியிலேயே தோன்றி வளர்ந்தது. |
பாலை நிலத்தில் வாழ்ந்தவர் எயினர், மறவர் எனப்பட்டனர். இந்நிலம் நில அடிப்படையில் மனித நாகரிகத்துக்குப் பயன் படவில்லை. அது வழிப்பறிக்குரிய இடமாயிருந்தது! ஆனால் மறவர் படிப்படியாக அரசர்களைச் சார்ந்து அவர்கள் படையில் |
|
* இலத்தீனில் பெகு (Pecu) ஆனினத்தையும் பணத்தையும் குறிக்கும். |