பக்கம் எண் :

24

 
வீரர்களாகி அரசு காத்தனர். தமிழர்களை முதல் பேரரசர் ஆக்கியவர்கள் இந்த
மறவர்களேயாவர். நெய்தல் நிலத்திலுள்ள பரதவர் அவர்களைக் கடற் பேரரசராக்க
உதவினர்.
 
நகர் நாடு
 
     ஆற்று வெளியிலேயே மனித நாகரிகம் முழு வளர்ச்சி யடைந்தது. உழவு
(வேளாண்மை) இதன்தலைத் தொழிலாயிற்று. இதில் வாழ்ந்தவர் வேளாளர்
எனப்பட்டனர். மனித சமுதாயத்தில் குடியாட்சி பிறந்த நிலம் இதுவே. வேள் என்ற
சொல் தமிழில் முடிசூடா மன்னனைக் குறிக்கும். இதே சொல்லுக்குப் படைவீரர்,
வணிகர், தொழிலாளர், கடவுள், கடவுள் வழிபாடு என்ற பொருள்களும் உண்டு.
இதற்கேற்ப இந்நிலத்தில் வேளாளரிடையே அந்தணர், அரசர் அல்லது வீரர், வணிகர்,
உழவர் ஆகிய மூல வகுப்புக்களும், பல கலைத் தொழில்களும், தொழில்களுக்கு உரிய
கிளை வகுப்புக்களும் தோன்றின. குடியுரிமை மன்னரின் தலைவராக, முடியுரிமை
மன்னரும் ஏற்பட்டனர். இம்மன்னர் ஆண்ட பேரூர் அல்லது நகரமும், கோட்டையும்,
அதைச் சார்ந்த சிற்றூர்களும், மலையும், காடும், ஆறும், கடற்கரையும் சேர்ந்து ஒரு
நாடு ஆயின. இத்தொடக்கக் கால நாட்டை மேனாட்டு வரலாற்று நூலாசிரியர் *'நகர்
நாடு' என்பர்.
 
     கடற்கரைப் பகுதி அல்லது நெய்தல் நிலம் முதலில் நாகரித்தில் பிற்பட்டே
இருந்தது. இதிலுள்ள மக்கள் பரதவர் எனப்பட்டனர். மீன், உப்பு, சங்கு, முத்து ஆகிய
கடல் வளத்தாலும், கடல் கடந்த வாணிகத்தாலும் இப்பகுதி விரைவில் ஆற்று
நிலத்துடன் நாகரிகத்தில் போட்டியிட்டது. துறைமுக நகரங்கள் தமிழில் பட்டினங்கள்
என்றழைக்கப்பட்டன.
 
     தமிழகத்தில் மட்டுமன்றித் தென்னாடெங்கும், அதற்கப்பாலும், பட்டினம் என்ற
தமிழினப் பெயர் இன்றும்

* City State